Advertisment

சி.ஏ.ஏ முதல் சட்டப்பிரிவு 370 வரை... தி.மு.க தேர்தல் அறிக்கையில் ‘இண்டியா கூட்டணி’ சார்பில் வாக்குறுதி

தமிழகத்தில் தி.மு.க போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டது, அவர்களில் 11 பேர் புது முகங்கள் இடம்பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Manifesto DMK

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட, தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு (பி.டி.ஐ புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குடியுரிமை (திருத்தம்) சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளை அமல்படுத்த மாட்டோம் என்றும், ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொட்ண்டு வருவோம் என்று வரும் லோக்சபா  தேர்தலுக்காக தி.மு.க புதன்கிழமை உறுதியளித்தது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: CAA to Art 370, DMK makes promises on behalf of ‘an INDIA govt’ in manifesto

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க சார்பில் போட்டியிடும் தற்போது எம்.பி.க்களாக உள்ள 10 எம்.பி.க்கள் உட்பட 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். டி.ஆர். பாலு, கனிமொழி மற்றும் ஆ. ராஜா போன்ற குறிப்பிடத்தக்க தலைவர்கள் முறையே அவர்களின் வழக்கமாக போட்டியிடும் இடங்களான ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி மற்றும் நீலகிரி (எஸ்சி) ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தி.மு.க.வின் கோட்டையான சென்னையில், மத்திய சென்னையில் மூத்த தலைவர் தயாநிதி மாறனும், சென்னை வடக்கில் கலாநிதி வீராசாமியும், சென்னை தெற்கில் தமிழச்சி தங்கபாண்டியனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது எம்.பி.க்களாக உள்ள எஸ். ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம். கதிர் ஆனந்த் (வேலூர்), கே. செல்வம் (காஞ்சிபுரம் (எஸ்.சி.), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆகியோரும் இந்த முறையும் வேட்பாளர்களாக அறிவிக்கபப்ட்டுள்ளனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் தலைவரும், கோவை மேயருமான கணபதி ராஜ்குமார் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இங்கே நிறுத்தப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாத முக்கிய நபர்களில் சர்ச்சைக்குரிய தலைவர்கள் எஸ்.செந்தில்குமாருக்கு பதில் தருமபுரியில் ஏ.மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரனின் முன்னாள் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி) மற்றும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்) ஆகியோரும் தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. 

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் 3 பெண்கள், 19 பட்டதாரிகள், 12 முதுகலை பட்டதாரிகள், 6 வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு டாக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், முனைவர் பட்டம் பெற்ற 2 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தி.மு.க கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி 1 தொகுதி உட்பட 10 இடங்களை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்த தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) மற்றும் வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களிலும், ஐ.யு.எம்.எல், ம.தி.மு.க. கொ.ம.தே.க தலா 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.

2019-ம் ஆண்டில், தி.மு.க தலைமையிலான கூட்டணி, அதன் பரந்த வரையறைகள் அப்படியே உள்ளது, தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் 38 இடங்களை வென்றது. அப்போது தி.மு.க 26 இடங்களில் வெற்றி பெற்றது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கட்சி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு, பொது சிவில் சட்டம், சி.ஏ.ஏ மற்றும்  ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ போன்ற சர்ச்சைக்குரிய தேசிய பிரச்னைகளை தைரியமாக தீர்க்கவும் தனது கட்சி உறுதிபூண்டுள்ளதாக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின் கூறினார். மேலும், மாநிலங்களுக்கு உண்மையில் தன்னாட்சி இருக்கும் வகையில் இண்டியா கூட்டணி அரசௌ அரசியலமைப்பை திருத்தும் என்றும் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

கடந்த வாரம் மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த பிறகு, சி.ஏ.ஏ நடைமுறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.

மேலும், தி.மு.க தேர்தல் அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையை இண்டியா கூட்டணி அரசு வழங்கும்; திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது, தேசியக் கல்விக் கொள்கையை (என்.இ.பி) ரத்து செய்வது, தனி ரயில்வே பட்ஜெட், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. பெண்கள், முதல்வர்களின் வளர்ச்சிக் குழுவை அமைத்தல் மற்றும் ஆளுநர்களுகு அதிக அதிகாரங்களை வழங்கும் சட்ட விதிகளை நீக்குதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment