தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மக்களைச் சென்றடைவதில் சிக்கல் இருப்பதாகவும், தேசியக் கொடியை ஏற்றவும் குடியரசு தினத்தில் உரை நிகழ்த்தவோகூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறினார். இப்படி தெலுங்கானா அளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசிய ஒரு நாள் கழித்து, தி.மு.க., பத்திரிகையான ‘முரசொலி’ திங்கள்கிழமை கட்டுரை வெளியிட்டுள்ளது. அனைத்து ஆளுநர்களும் தங்கள் அரசியலமைப்பு வரம்புகளை மீறிச் செல்லக்கூடாது, அல்லது அவர்கள் அப்படி சென்றால், அதே வழியில்தான் நடத்தப்படுவார்கள் என்பதை நினைவூட்டி முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.
அனைத்து ஆளுநர்களும் தங்களின் அரசியலமைப்பு வரம்புகளைத் தாண்டிச் செல்லக்கூடாது. அப்படி தாண்டி செயல்பட்டால், அவர்கள் அதே வழியில் நடத்தப்படுவார்கள் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி' திங்கள்கிழமை ஒரு கட்டுரை வெளியிட்டது.
அந்தந்த மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களில் தலையிட முயன்றால் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஏற்பட்ட நிலைதான் மற்ற மாநில ஆளுநர்களுக்கும் அதே நிலைதான் ஏற்படும் என்று முரசொலியில் சிலந்தியின் பத்தியில் கூறப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் வல்லுனர்களை உள்ளடக்கி உரிய முறையில் திட்டமிட்டு செயல்படுத்தும் ஜனநாயக அமைப்பைக் கொண்டிருக்கும்போது, மாநிலக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தடுக்கவோ அல்லது சீர்குலைக்கவோ எந்த மாநில அரசும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை அனுமதிக்க முடியாது என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
“மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சண்டையால் மக்கள் மற்றும் அவர்களின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சில மாநில அரசுகள் நல்லதொரு தொடர்பைக் கண்டறிய முயற்சி செய்யலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் ஆளுநர்கள் தடுமாறிக் கொண்டிருந்தால், ஆளுநர் சௌந்தரராஜனுக்கு ஏற்பட்ட நிலைதான் அவர்களுக்கும் ஏற்படும். எனவே அனைத்து சுயமாக செயல்படும் ஆளுநர்களும் இதை விரைவில் உணர வேண்டும்” என்று முரசொலியில் கூறப்பட்டுள்ளது.
“மேதகு தமிழிசை தந்தது பேட்டி அல்ல, சில சில ஆளுநர்களுக்கு உணர்த்திடும் பாடம்” என்ற தலைப்பில் தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு வழிவகுத்தது என்ன என்று கொஞ்சம் யோசித்திருந்தால், தன் தலைவிதியைப் பற்றி புலம்புவதைத் தவிர்த்திருக்கலாம். “மத்திய அரசை நடத்தும் கட்சிக்கு (பாஜக) ஏஜெண்டுகளாகப் பணியாற்றுவதற்குப் பதிலாக, ஆளுநர்கள் மாநில அரசுடன் இணைந்து மக்களின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முரசொலியில் வெளியான அந்த கட்டுரையில், “அரசியல் சட்ட வரம்புகளுக்கு மாறாக மாநில அரசுகளை ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்தும் தமிழக ஆளுநர் உட்பட அனைத்து ஆளுநர்களும் தெலுங்கானா ஆளுநருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்படலாம் மாறாது என்பதை உணர்ந்திட வேண்டும்” என்று நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
முரசொலியில் வெளியாகியுள்ள இந்த கட்டுரை, தமிழக அரசின் சில முக்கியமான கொள்கை விவகாரங்களில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் சூழலில் வெளியாகி இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை, மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு, ஹிந்தியை தவிர்த்து இரு மொழிக் கொள்கை போன்றவற்றை ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் தமிழிசை சௌந்தரராஜன், “ஒரு பெண் ஆளுநர் நடத்தப்பட்ட விதம் தெலுங்கானா வரலாற்றில் இடம் பெறும்” என்று கூறியிருந்தார்.
ஆளுநர் என்ற முறையில் தான் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் மற்றும் தடைகள் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். மாநில அரசு தனது பயணத்திற்கு ஹெலிகாப்டர் வழங்க மறுத்த சம்பவத்தை அவர் குறிப்பிட்டார். பழங்குடியின பெண்களின் திருவிழாவான சமக்கா சரக்கா ஜாத்ராவுக்குச் செல்ல விரும்பியபோது, ஹெலிகாப்டர் கோரிய தனது கோரிக்கைக்கு கடைசி நிமிடம் வரை பதிலளிக்காமல் 8 மணிநேரம் சாலை வழியாக பயணம் செய்ய மாநில அரசு கட்டாயப்படுத்தியதாக அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.