தமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது : மக்களவையில் எம்.பி. தயாநிதி மாறனின் பேச்சால் சலசலப்பு

தமிழகத்தில் மக்கள் நலனுக்கான ஒரு அரசு செயல்படவில்லை. ஒரு அடிமை அரசாகத்தான் இருக்கிறது. அதனால்தான் தலைமை செயலகத்தில் நுழைந்து சோதனை நடத்துகின்றனர்.

By: June 25, 2019, 1:48:04 PM

தமிழகத்தில் மக்கள் நலனுக்கான ஒரு அரசு செயல்படவில்லை. ஒரு அடிமை அரசாகத்தான் இருக்கிறது என்று மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறிய கருத்தால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பருவமழைக்கு முந்தைய மழை என்பது 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. புவி வெப்பமயமாதலால் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு இதேபோல் குடிநீர் பிரச்சனை ஏற்பட்ட போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி செயல்படுத்தினார்.

கடந்த மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால்தான் பா.ஜ.,வெற்றி பெற்றது. திமுக வலிமையான கூட்டணி அமைத்ததால், தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 2014 லோக்சபா தேர்தலில் பணபலத்தால் அதிமுக பெற்றது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்ட பின்னரும் கூட நீர் திறக்கப்படவில்லை. தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் போனால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்களா?

ஊழல் ஒழிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பேசியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் ஊழலில் ஊறிப் போன அதிமுக அரசுதான் இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் நலனுக்கான ஒரு அரசு செயல்படவில்லை. ஒரு அடிமை அரசாகத்தான் இருக்கிறது. அதனால்தான் தலைமை செயலகத்தில் நுழைந்து சோதனை நடத்துகின்றனர். புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தின் கல்வி முறையை மத்திய அரசு ஏன் மாற்ற முயற்சிக்கிறது? இவ்வாறு தயாநிதி பேசினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Dmk mp dayanidhi maran speech loksabha

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X