Advertisment

தேர்தலில் பாஜக வெற்றி குறித்து சர்ச்சை பேச்சு- மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி.; இந்தியா கூட்டணிக்குள் அதிருப்தி

கடந்த சில ஆண்டுகளாக, திமுக தலைவர்கள் தங்களது கருத்துகளால் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
DMK MP DNV Senthilkumar

DMK MP DNV Senthilkumar

உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து விமர்சித்ததால், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தி.மு.க. தருமபுரி எம்.பி. செந்தில்குமார், இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து, செவ்வாய்கிழமை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த கருத்துக்கள் பின்னர் பாராளுமன்ற பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 இல் பேசும் போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

செந்தில்குமாரின் கருத்தை பாஜக விமர்சித்தது, மேலும் இந்தி நிலத்தில் இருக்கும் திமுகவின் இந்தியா கூட்டணிக் கட்சிகளும் வருத்தமடைந்த நிலையில், செந்தில்குமார் சில மணி நேரம் கழித்து மன்னிப்பு கேட்டார்.

முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.

எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,

அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’, என்று செந்தில்குமார் ட்விட்டரில் பதிவிட்டார்.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில், ’நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய கடமை கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மக்களவையில் திமுக எம்.பி., மக்களவையில் பேசுகையில், ‘********** மாநிலங்கள் என்று நாம் பொதுவாக அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் பாஜக தென்னிந்தியாவுக்கு வர முடியாது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதன் அனைத்து முடிவுகளையும் நீங்கள் காண்கிறீர்கள். நாங்கள் அங்கு மிகவும் பலமாக இருக்கிறோம்... நீங்கள் அங்கு காலடி எடுத்து வைத்து இந்த தென் மாநிலங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கனவிலும் நினைக்க முடியாது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெற்றி பெற முடியாததால், லெப்டினன்ட் கவர்னர் மூலம் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே, ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது பாஜக என்றும் செந்தில்குமார் கூறினார்.

பாஜகவின் விமர்சனம் மற்றும் கூட்டணியில் அதிருப்தி

செந்தில்குமாரை கடுமையாக சாடிய அண்ணாமலை, ‘திமுகவின் தவறான ஆட்சியால் சென்னை மூழ்கிக்கொண்டிருக்கிறது, ‘நாடாளுமன்றத்தில் அவர்களின் பேச்சும் அப்படித்தான் இருக்கிறது.

நமது வட இந்திய நண்பர்களை பானி பூரி விற்பவர்கள், கழிவறை கட்டுபவர்கள், கோ முத்திரா என்று அழைப்பதன் மூலம் இந்தியா கூட்டணியின் திமுக எம்.பி அவமானப்படுத்துகிறார். இந்த உணர்வற்ற கருத்தை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

கர்நாடகாவில் சமீப காலம் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தது என்பதை அவர் மறந்துவிட்டிருக்கலாம். தி.மு.க.வின் ஆணவமே அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும்என்றார்.

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், செந்தில் உடனடியாக மன்னிப்பு கேட்டு தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும், என்றார்.

அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது, என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.எல்.புனியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

பெயர் வெளியிட விரும்பாத தெற்கைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், இந்த பேச்சைக் கேட்டு சங்கடம் அடைந்ததாகவும், பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும், மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்க வேண்டிய அவசியமில்லை, என்றும் கூறினார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்பி மனோஜ் கே ஜா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ’நாம் அனைவரும் நாகரீகமான உரையாடலின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தாத அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். பாஜகவின் வேதனை உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, என்றார்.

சமாஜ்வாடி கட்சி எம்பி ஜாவேத் அலி கான், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை இப்படி தனிமைப்படுத்தக்கூடாது, இது ஏற்புடையதல்ல, என்றார்.

ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், ’எந்தவொரு அரசியல் கட்சியில் உள்ள எந்த ஒரு தலைவராலும் இதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இது பாராளுமன்ற மொழி அல்ல, இதுபோன்ற அறிக்கைகளை எந்த அரசியல் தலைவரும் பயன்படுத்தக்கூடாது. இந்தக் கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், என்றார்.

திமுக சம்பந்தப்பட்ட மற்ற விவகாரங்கள்

செந்தில்குமார் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, தருமபுரி மாவட்டத்தில் சாலைப் பணித் தொடக்க விழாவின் போது, ​​“பூமி பூஜைவிழாவுக்கு ஏற்பாடு செய்ததற்காக, மூத்த அரசு அதிகாரி ஒருவரை காட்டமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

2019 தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸை தோற்கடித்த ரேடியாலஜிஸ்ட் நிபுணரான 46 வயதான எம்.பி., அப்போது மாநில பாஜகவால் இந்து விரோதி என்று குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக, திமுக தலைவர்கள் தங்களது கருத்துகளால் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டில், அமைச்சர் கே என் நேரு, பீகாரிகளுக்கு தமிழர்களை விட மூளை குறைவாக உள்ளது, அவர்களின் வேலைகளை பறிப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு, திமுக ராஜ்யசபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன், இந்தி தமிழர்களை "சூத்திரர்" நிலைக்குத் தள்ளும் என்றார்.

இந்த ஜனவரியில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பானிபூரி விற்ற வடநாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்தார். அதன்பிறகு, செப்டம்பர் மாதம் உதயநிதி, இந்து மதத்துடன் பரவலாகப் பார்க்கப்படும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அவர் அதை கொசுக்கள், டெங்கு, மலேரியா, காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸுடன் ஒப்பிட்டார்.

பாஜக அந்தக் கருத்தைத் தாங்கிப்பிடித்து, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியைக் குறிவைத்து இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசியது. மூன்று மத்திய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது பாஜக அதை மீண்டும் மீண்டும் எழுப்பியது.

Read in English: After uproar over his remarks in Parliament on BJP winning elections, DMK MP apologises; INDIA allies miffed

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment