Advertisment

டி.என்.ஏ மசோதா தரவுதளங்களை குறிவைக்கலாம்; எச்சரிக்கை செய்யும் நாடாளுமன்ற நிலைக்குழு!

டி.என்.ஏ மாதிரிகள் சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்தின் பேரிலேயே எடுக்க வேண்டும். யாரையும் எக்காரணம் கொண்டும் நிர்பந்திக்க கூடாது என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
DNA bill, DNA bill india, DNA bill parliament committee, DNA regulation bill, indian express news

Esha Roy

Advertisment

DNA Bill: House panel flags fears that databank may target groups -  டி.என்.ஏ தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா 2019 குறித்து ஏற்பட்டிருக்கும் அச்சங்களை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது. குற்றப்பின்னணியில் சேகரிக்கப்படும் டி.என்.ஏவைக் கொண்டு தரவு தளம் உருவாக்கப்படுதல் குறித்தும் தங்களின் கவலையை தெரிவித்துள்ள நிலைக்குழு இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபர்கள் குறிவைக்கப்படும் நிலையும் உருவாகும் என்றும் கூறியுள்ளனர்.

குற்ற விசாரணைக்கு டி.என்.ஏ தொழில்நுட்பத்தின் தேவையை அங்கீகரிக்கும் அதே நேரத்தில், க்ரைம் சீன் டி.என்.ஏ சுயவிபரத்திற்கான தரவு தளத்தில் கிட்டத்தட்ட அனைவரின் டி.என்.ஏ தகவல்களும் இருக்கும். குற்ற சம்பவத்திற்கு முன்னும் பின்னும் அந்த சம்பவத்திற்கு தொடர்பில்லாத நபர்களின் டி.என்.ஏவும் இருப்பதால் இது ஒரு ஆபத்தை உருவாக்கலாம் என்று அது கூறியுள்ளது.

இந்த அச்சங்கள் ஆதாரமற்றவை என்று கூறிவிட இயலாது. இதனை நாடாளுமன்றமும் அரசும் அடையாளப்படுத்தி, கவனிக்கப்பட வேண்டும். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் மனநிலைக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வகையில் மற்றும் அரசியலமைப்போடு டி.என்.ஏ விவரக்குறிப்பு செய்யப்படுவதை உறுதிசெய்ய விரைவில் ஒரு எக்கோசிஸ்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று குழு வலுவாக கருதுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

2003ம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த மசோதாவில் பயோடெக்னாலஜி மற்றும் சட்டத்துறை அமைச்சகம் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுன் நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. நிலைக்குழுவில் இடம் பெற்றவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் இந்த மசோதாவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசினர். மதம், சாதி, மற்றும் அரசியல் கருத்துகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைக்க இந்த மசோதா தவறாக பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.

இந்த மசோதா மிகவும் தொழில்நுட்பமானது, சிக்கலானது, மற்றும் உணர்திறன் கொண்டது என்பதை நிலைக்குழு அறிந்திருக்கிறது. மதம், சாதி அல்லது அரசியல் பார்வைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் நமது சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளை குறிவைக்க டி.என்.ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பல உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த அச்சங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை அல்ல எனவே இந்த அச்சங்கள் அங்கீகரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தரவுதளம் குறித்து பேசும் போது, ஒரு குற்ற சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபரின் டி.என்.ஏ அங்கே இருக்க முடியும் என்று குழு கூறியுள்ளது. மேலும் முடி போன்ற உடற்கூறுகள் பல்வேறு வழிகளில் கவனக்குறைவாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்திருக்கலாம். இது போன்ற டி.என்.ஏ சுயவிபரங்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தின் இண்டெக்ஸில் இடம் பெறலாம். இதனை விசாரணைக்கு மட்டுமே பயன்படுத்தலாம் அன்றி தரவு தளத்தில் வைக்க வேண்டியதில்லை என்று நிலைக்குழு பரிந்துரை செய்கிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களை தவிர மற்ற நபர்களின் டி.என்.ஏ. சுய விவரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மசோதா ஒரு மத்திய தரவு தளம் மட்டுமின்றி, இது போன்று பிராந்திய தரவு தளங்களும் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க ஒரே ஒரு தேசிய தரவு தளம் மட்டும் இயங்கினால் போதும் என்றும் கூறியுள்ளது.

மேலும் படிக்க : மறுக்கப்படும் கழிவறை வசதிகள்; சிரமத்திற்கு ஆளாகும் விவசாயிகள்!

டி.என்.ஏ தொழில்நுட்பம் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கின்ற நிலையில், இது போன்ற ஒரு சட்டசேவையை நிலைக்குழு புறக்கணிக்கவில்லை. சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் அப்பாவி பொதுமக்களை போலி என்கவுண்ட்டரில் கொன்றதை அம்பலப்படுத்தியது. விசாரணையில் அவர்கள் போராளிகள் என்று கூறப்பட்டதிற்கு முற்றிலும் முரணாக இது அமைந்திருந்தது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

சி.பி.ஐ. எம்.பி. பினாய் விஸ்வம் மற்றும் எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாசுதீன் ஓவைஸி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். இது தனிநபரின் உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். போதுமான சட்டப்பாதுகாப்புகளை உறுதி செய்யும் அம்சங்கள் ஏதும் இல்லை என்றும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு குறிப்பாக பட்டியல் சமூகத்தினர், பட்டியல் பழங்குடிகள், மத மற்றும் பாலியல் சிறுபான்மையினருக்கு இந்த மசோதா பிரச்சனையை உருவாக்கும் என்று கூறினார் விஸ்வம். ஓவைஸி "குறிப்பிட்ட குழுக்களின் இலக்கு பாகுபாடுகளுக்கு" சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்துவது ஒவைசி கவலைகளை எழுப்பினார்.

இந்த கமிட்டியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மற்ற இரண்டு உறுப்பினர்களின் கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டு அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

டி.என்.ஏ. ஒழுங்குமுறை மசோதா, குற்றவாளிகள், காணாமல் போன குழந்தைகள் மற்றும் நபர்கள், அடையாளம் காணப்படாத உடல்கள் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து டேட்டாபேஸ் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளது. இந்த டேட்டா பேஸ் மீண்டும் மீண்டும் கொடூரமான குற்றச்செயல்கள் புரியும் நபர்களை அடையாளம் காண உதவும் என்று கூறுகிறது.

கிட்டத்தட்ட 60 நாடுகள் இதேபோன்ற சட்டத்தை இயற்றியுள்ளன என்றும், தனியுரிமை, ரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான அனைத்து முக்கிய விஷயங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பயோடெக்னாலஜி துறை வாதிட்டது.

டி.என்.ஏ ஒழுங்குமுறை வாரியம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு டி.என்.ஏ. ஆய்வகங்கள் மற்றும் தரவு தளங்களை அமைத்தல் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் , தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை வகுத்தல் போன்றவற்றை வழங்கும் என்றும் மசோதா கூறியுள்ளது.

இந்த வாரியம் அரசாங்க அதிகாரிகளுக்கு சேவை செய்வதாக இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். டி.என்.ஏ மாதிரிகள் சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்தின் பேரிலேயே எடுக்க வேண்டும். யாரையும் எக்காரணம் கொண்டும் நிர்பந்திக்க கூடாது என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.  இண்டெர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேசன், தேசிய சட்ட பல்கலைக்கழகம், இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம், மற்றும் குஜராத் தடயவியல் பல்கலைக்கழக உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment