/indian-express-tamil/media/media_files/2024/11/03/OjrXvBzCJ3RQNZsv5jIq.jpg)
மத்திய பிரதேசத்தில், மருத்துவமனை படுக்கையை கர்ப்பிணி பெண்ணை கொண்டு சுத்தம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் மறாவி என்பவர் மீது நிலத்தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், சிகிச்சைக்காக கர்தாசாரி ஆரம்ப சுகாதார மையத்தில் சிவ்ராஜை அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Doctor, two nurses suspended after pregnant woman in MP’s Dindori ‘made to clean hospital bed after husband’s death’
இந்நிலையில் சிவ்ராஜின் மனைவி ரோஷினியை, இரத்தக் கறை படிந்த மருத்துவமனையின் படுக்கையை சுத்தம் செய்யக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மருத்துவமனை படுக்கையை ரோஷினி சுத்தப்படுத்தும் வீடியோ இணையத்தில் பரவியது. மேலும், ரோஷினி 5 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவரை பணியிட மாற்றம் செய்தும், இரண்டு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்தும் சுகாதார துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.