அமித் ஷா குறித்த சர்ச்சை வீடியோ; தெலுங்கானா முதல்வருக்கு டெல்லி போலீசார் சம்மன்

இடஒதுக்கீடு தொடர்பாக அமித் ஷா பேசியது போன்ற சர்ச்சை வீடியோ; தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன்

இடஒதுக்கீடு தொடர்பாக அமித் ஷா பேசியது போன்ற சர்ச்சை வீடியோ; தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன்

author-image
WebDesk
New Update
revanth reddy

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (பி.டி.ஐ)

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Sreenivas Janyala , Arnabjit SurSukrita Baruah

தெலுங்கானா காங்கிரஸால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீடியோ தொடர்பாக, காங்கிரஸின் மாநிலத் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Doctored’ video of Amit Shah: Delhi Police summons Telangana CM Revanth Reddy, Congress worker held in Assam

ஒரிஜினல் வீடியோவில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை பா.ஜ.க நீக்கும் என்று அமித் ஷா கூறுவது கேட்கிறது. ஆனால், எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட அனைத்து இடஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறுவது போல் வீடியோ டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க டெல்லி காவல்துறை அமைத்த சிறப்புக் குழுவின் அதிகாரிகள் திங்கள்கிழமை ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்து நோட்டீஸை ஒப்படைத்தனர்.

Advertisment
Advertisements

உளவுத்துறை இணைவு மற்றும் மூலோபாய செயல்பாடுகள் (IFSO) பிரிவில் பா.ஜ.க புகார் அளித்ததை அடுத்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும், சட்டம்-ஒழுங்கு நிலைமையை மோசமாக பாதிக்கும் வகையிலும் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேவந்த் ரெட்டி கர்நாடகாவில் பிரசாரம் செய்து வருவதாகவும், ஐதராபாத் திரும்பிய பிறகு சம்மனுக்கு பதிலளிப்பார் என்றும் தெலுங்கானா முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, அமித் ஷா மற்றும் பல பா.ஜ.க தலைவர்கள் கட்சி மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்றும், 4 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் கூறியுள்ளனர். மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் இடஒதுக்கீடு நீக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Congress Telangana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: