Advertisment

குழந்தை பிறப்பதற்கு முன்பே மரபணு கோளாறுகளை கண்டறிய தவறிய 4 மருத்துவர்கள்: கேரளா போலீஸ் வழக்கு பதிவு

பி.என்.எஸ் பிரிவுகள் 125 மற்றும் 125பி-யின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த பிரிவுகள் மனித உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான மற்றும் அலட்சியமான செயல்களைக் கையாள்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
baby

ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 8 ஆம் தேதி குழந்தை பிறந்தது. (File Photo)

கேரளாவின் ஆலப்புழாவில் புதிதாகப் பிறந்த குழந்தையின் மரபணு கோளாறுகளை குழந்தை பிறப்பதற்கு முன்பே கண்டறியத் தவறியதாக நான்கு மருத்துவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: 4 doctors booked for failing to diagnose genetic disorders before baby’s birth in Kerala

பிறந்த குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நவம்பர் 26-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டகுற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் புஷ்பா மற்றும் ஷெர்லி என அடையாளம் காணப்பட்டனர், இருவரும் ஆலப்புழாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்கள். மற்ற இருவரும், மிடாஸ் ஹெல்த் கேர் மற்றும் ஸ்கேனிங் லேபரட்டரி மற்றும் ஷங்கரின் ஹெல்த் ஸ்கேன் மற்றும் டயக்னாஸ்டிக் ஆகிய தனியார் ஆய்வகங்களைக் கொண்ட பெயர் குறிப்பிடப்படாத மருத்துவர்கள்.

பி.என்.எஸ் பிரிவுகள் 125 மற்றும் 125பி-யின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த பிரிவுகள் மனித உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான மற்றும் அலட்சியமான செயல்களைக் கையாள்கிறது.

குழந்தை வயிற்றில் இருக்கும்போதே மரபணு கோளாறுகளை மருத்துவர்கள் கண்டறியத் தவறியதாக எழுந்த புகாரின் பேரில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் மூலம் துறை ரீதியான விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தாய்,  "எனக்கு பல குறைபாடுகளுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கண்களைத் திறக்கவில்லை மற்றும் அதன் பிறப்புறுப்புகளில் கடுமையான குறைபாடு உள்ளது. டாக்டர்கள் யாரும் எனக்கு இந்த பிரச்னைகள் பற்றி தெரிவிக்கவில்லை" என்று கூறினார்.

ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 8ம் தேதி இந்த குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தில், தாய் மருத்துவர் புஷ்பாவின் சிகிச்சையில் இருந்தார். மருத்துவரின் ஆலோசனையின் பேரில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிடாஸ் ஆய்வகத்தில் மூன்று முறை ஸ்கேன் செய்யப்பட்டது. ஜூலை முதல் நவம்பர் தொடக்கம் வரை நான்கு முறை சங்கரின் ஹெல்த்கேர் ஸ்கேன் மற்றும் டயக்னாஸ்டிக்ஸ் மூலம் ஸ்கேனிங் செய்யுமாறு கூறிய ஷெர்லி என்ற மற்றொரு மருத்துவரை அணுகவும் இந்த முடிவு செய்தார். டாக்டர் ஷெர்லியும் ஸ்கேன் அறிக்கைகளை ஆய்வு செய்தார், ஆனால், கருவில் எந்த அசாதாரணத்தையும் கண்டறியவில்லை.

டாக்டர் ஷெர்லியின் ஆலோசனையின் பேரில், அக்டோபர் 30-ம் தேதி அந்தப் பெண் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, கருவின் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பற்றிய புகாரைத் தொடர்ந்து அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். நவம்பர் 8-ம் தேதி சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment