நாட்டிலுள்ள அனைத்து மருத்துவர்களும் தேசிய மருத்துவப் பதிவேட்டில் தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெறுவார்கள், அது அடுத்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் தங்களின் தகுதிகள், பெல்லோஷிப்கள் மற்றும் பிற படிப்புகள் பற்றிய விவரங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கக்கூடிய வகையில் இந்த பதிவேடு மாறும். இந்த மையப்படுத்தப்பட்ட களஞ்சியம் மக்கள் தங்கள் மருத்துவரின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்க அனுமதிக்கும் என்று நாட்டின் உச்ச மருத்துவக் கட்டுப்பாட்டாளரின் கீழ் உள்ள நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியத்தைச் சேர்ந்த டாக்டர் யோகேந்திர மாலிக் கூறினார்.
மதிப்பீட்டு முறைக்கான சோதனை ஏற்கனவே 8 கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளது. 4 தனியார் கல்லூரியிலும் 4 அரசு கல்லூரியிலும் நடத்தப்படடுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இப்போது மதிப்பீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் இந்த செயல்முறையை இறுதி செய்ய ஆலோசனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
“தனித்துவ ஐ.டி என்பது வங்கிக் கணக்கு போல இருக்கும். இதில் மருத்துவர்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும். NMC-யின் கீழ் உள்ள அமைப்புகள், மருத்துவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் அல்லது அவர்கள் மேற்படிப்புக்காகச் செல்லும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற பல்வேறு பங்குதாரர்கள், தேவைக்கேற்ப மக்கள் வெவ்வேறு அளவிலான தரவுகளை அணுகுவார்கள்,” என்று மாலிக் கூறினார்.
சரிபார்க்கப்பட்ட தகவல்களுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப தளம், மருத்துவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க கல்லூரிகளுக்கு எளிதாக இருக்கும் என்று தகவல் தெரிவித்தனர். தேசிய மருத்துவ ஆணையம் அடுத்த ஆறு மாதங்களில் ஐ.டி தளத்தை சோதிக்க ஒரு பைலட்டை இயக்கும் என்று மாலிக் கூறினார்.
புதிய பதிவேடு மருத்துவர்கள் பல மாநிலங்களில் பணிபுரிய அனுமதிக்கும். தற்போதைய இந்திய மருத்துவப் பதிவேட்டை உருவாக்க, மாநில மருத்துவ கவுன்சில்களின் தரவு பயன்படுத்தப்பட்டது, அது இந்தப் புதிய பதிவேட்டால் மாற்றப்படும்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/doctors-to-get-unique-id-in-national-medical-register-by-the-end-of-2024-9008302/
அதில் பதிவு எண், பதிவு செய்த தேதி, பணிபுரியும் இடம், மருத்துவத் தகுதிகள், சிறப்பு, தகுதிகள் பெற்ற பல்கலைக்கழகம், தேர்ச்சி பெற்ற ஆண்டு போன்ற விவரங்கள் இருக்கும். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.