Advertisment

கேரள குண்டுவெடிப்பு; 850 கோடி மக்களின் அழிவை விரும்புகிறார்கள்: ஃபேஸ்புக் நேரலையில் டொமினிக் மார்டின்

யெகோவா சாட்சியங்கள் சபை, உலகில் உள்ள 850 கோடி மக்களின் அழிவை விரும்புகிறது; சக தோழன், தோழியை விபச்சாரி என்கிறது. நர்சரி மாணவன் மனதிலும் விஷத்தை விதைக்கின்றது என பல்வேறு குற்றச்சாட்டுகளை டொமினிக் மார்டின் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Blast At Convention Centre In Kerala

கேரளத்தில் உள்ள யெகோவா சாட்சியங்கள் சபை பிரார்த்தனை கூட்டரங்கில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அச்சபையில் முன்னாள் உறுப்பினராக டொமினிக் மார்டின் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார்.

கேரளத்தின் களமச்சேரி யகோவா சாட்சிகளின் பிரார்த்தனை கூடத்தில் வெடித்த வெடிகுண்டுக்கு நானே பொறுப்பு எனக் கூறி அந்த சபையின் பழைய உறுப்பினரான டொமினிக் மார்டின் என்பவர் கொடக்கரை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அதற்கு முன்னதாக அவர் பேஸ்புக் நேரலையில் பேசியுள்ளார். “அதில் இந்தக் குண்டுவெடிப்புக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்கிறேன்.

Advertisment

இந்தச் சபையில் 16 ஆண்டுகள் உறுப்பினராக இருந்துள்ளேன். இது நாட்டு மக்களுடன் பழகக்கூடாது அவர்களுடன் சாப்பிடக்கூடாது என்றும் போதிக்கும் இயக்கம்.
அவர்கள் நான்கு வயது நர்சரி பள்ளி சிறுவனுக்கு வகுப்புத் தோழி கொடுக்கும் மிட்டாய்களை நீங்கள் சாப்பிடக்கூடாது என்று கற்பித்தார்கள். நான்காவது வயதில் இருந்தே குழந்தையின் மனதிற்குள் பெற்றோர் விஷத்தை செலுத்தினர்.

தேசிய கீதம் பாட வேண்டாம் என்று கூறினர். வயதாகும்போது வாக்களிக்கக் கூடாது என்று கற்றுக் கொடுத்தனர். அவர்களெல்லாம் கெட்டவர்கள், கும்பலில் சேரக் கூடாது, ராணுவப் பணி செய்யக் கூடாது, அரசுப் பணியில் ஈடுபடக் கூடாது. நீங்கள் ஆசிரியராக இருக்க கூட அனுமதிக்கப்படவில்லை.

பூமியில் உள்ள அனைவரும் அழிந்து போவார்கள், அவர்கள் மட்டுமே வாழ்வார்கள் என்று போதிக்கிறார்கள். 850 கோடி மக்களின் அழிவை விரும்பும் மக்களை என்ன செய்வது?
என்னால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த இயக்கம் நாட்டுக்கு ஆபத்தானது என்பதை தெளிவாக அறிந்து கொண்டேன்.

தவறான கருத்துக்களைக் கடைப்பிடிக்கும் நபர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்னைப் போன்ற ஒரு சாமானியன் தன் உயிரைக் கொடுக்க வேண்டும்.
மேலும் நம்முடன் பயணிக்கும் அருகில் நிற்கும் சகோதரன், சகோதரியை விபச்சாரிகள் என்கின்றனர்.
அவர்களின் யோசனை சரியானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளே நீங்கள் சொல்வது தவறு. நீங்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவ மாட்டீர்கள்.

நான் மிகவும் யோசித்த பின்னரே இதை செய்தேன். இந்த இயக்கம் நாட்டிற்கு தேவையில்லை. அதேநேரம் குண்டுவெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பதை ஒளிபரப்ப வேண்டாம்.
இது ஆபத்தானது; இதுபோன்ற விஷயங்கள் சாமானியர்கள் கைகளில் சிக்கிவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

யெகோவா சாட்சியங்கள் சபையில் வெடித்தது ஐஇடி ரக டிபன் பாக்ஸ் குண்டு ஆகும். மொத்தம் 3 குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தன.
இது குறித்து போலீசார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், 18 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர். இந்தத் தகவலை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kerala Bomb Blast
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment