இந்தியா முழுவதும் போராட்டங்களுக்கு காரணமான குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது இரண்டு நாள் பயணத்தின் போது மத சுதந்திரம் குறித்து விவாதித்ததாக செவ்வாய்கிழமை கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது இந்திய பயணத்தின் கடைசி நாளில் புது டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “ சிஏஏ பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. இது இந்தியாவின் உள்விவகாரம். இதில் இந்தியா அதன் மக்களுக்காக சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.
அதிபர் டிரம்ப் இருந்த ஐடிசி மௌரியா நட்சத்திர விடுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் பிரதமரிடம் இது குறித்து விவாதிக்கவில்லை என்றும் இதை சமாளிப்பது இந்தியாவின் உள் விவகாரம் மற்றும் இது தனிப்பட்ட சூழ்நிலை என்றும் கூறினார்.
இது குறித்து டிரம்ப் கூறுகையில், “நாங்கள் மத சுதந்திரம் பற்றி பேசினோம். மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன் என்று பிரதமர் கூறினார். அவர்கள் அதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். ஆனால், நான் அதைப் பற்றி விவாதிக்கவில்லை. இது இந்தியாவுக்குள் நடக்கிறது” என்றார்.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அவர்கள் முஸ்லிம்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுவதாக பிரதமர் மோடி கூறினார்.” என்றார்.
புதிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக மூன்றாவது நாளாக வன்முறை தொடர்வதால், வடகிழக்கு டெல்லியில் வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 10 ஆக உயர்ந்துள்ளது. வன்முறைக் கும்பல்கள், தடிகள், கம்பிகள் ஆகிய ஆயுதங்களை ஏந்தி பெட்ரோல் குண்டுகளால் வாகனங்கள், கடைகள் வீடுகளுக்கு தீவைத்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் காஷ்மீர் பிரச்சினையை சிக்கல் என்று அழைத்த டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கான தனது வாய்ப்பை மீண்டும் வலியுறுத்தினார். “நான் மத்தியஸ்தம் செய்வதற்கு எதையும் செய்ய முடியும். என்னால் செய்ய முடியும்” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும், பிரதமர் மோடிக்கு அவர் தனிப்பட்ட முறையில் இந்த வாய்ப்பை தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
இது குறித்து டிரம்ப், கூறுகையில், “நான் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை (மத்தியஸ்தராக இருப்பது). காஷ்மீர் என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் தங்கள் பிரச்சினையை தீர்க்கப் போகிறார்கள். அவர்கள் அதை நீண்ட காலமாக செய்து வருகின்றனர்” என்றார்.
பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்ததாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “நாங்கள் இன்று அதைப் பற்றி நிறைய பேசினோம். இரு மனிதர்களுடனான (பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர்) எனது உறவு மிகவும் நன்றாக இருப்பதால் நான் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன் என்று சொன்னேன்… மத்தியஸ்தம் செய்ய அல்லது உதவ நான் எதையும் செய்ய முடியும். நான் செய்வேன். அவர்கள் (பாக்) காஷ்மீர் தொடர்பாக வேலை செய்கிறார்கள்” என்றார்.
டிரம்ப், தலிபான் சமாதான ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்ததாகவும் அது நடக்க இந்தியாவும் விரும்புகிறது என்றும் கூறினார்.
அமெரிக்கா நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப்
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் நடந்தால், அது இந்த ஆண்டின் இறுதியில் இருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவை நியாயமாக நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா அநேகமாக அதிக வரி வசூலிக்கும் நாடாக உள்ளது என்று டிரம்ப் கூறினார். பைக் உற்பத்தியாளர் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை உதாரணமாக மேற்கோள் காட்டி டிரம் “அந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும்போது அவர்கள் மிகப்பெரிய அளவில் வரியை செலுத்த வேண்டி உள்ளது” என்று கூறினார்.
‘மோடி ஒரு பயங்கரமான தலைவர்’
பிரதமர் மோடியைப் பற்றி பாராட்டுதல்களைத் தெரிவித்த டிரம்ப், இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு என்றும், மோடியை பயங்கரமான தலைவர் என்றும் அழைத்தார். நாங்கள் பெரிய கூட்டங்களை நடத்தினோம். அது நன்றாக இருந்தது. அவர்கள் எங்களை விரும்பியதைவிட அவர்கள் எங்களை விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பிரதமருக்கும் எனக்கும் இடையே ஒரு பெரிய உறவு இருக்கிறது” என்று கூறினார்.
இன்று காலை இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், இரு நாடுகளும் எரிசக்தி துறையில் ஒன்று உட்பட மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன. வழக்கத்திற்கு மாறான தாராள மனப்பான்மைக்கும் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்த டிரம்ப், இந்த பயணம் மறக்க முடியாத, அசாதாரணமான மற்றும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.