scorecardresearch

இமயமலை காளான்; மட்டன் பிரியாணி டிரம்ப்புக்கு பரிமாறப்பட்ட ராஷ்டிரபதிபவன் மெனு

டெல்லி ராஷ்டிரபதி பவனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து மெனுவில் விலை உயர்ந்த மிகவும் சுவை மிகுந்த இமயமலை காளான், மட்டன் பிரியாணி உள்ளிட்ட சுவை மிகுந்த உணவுகள் இடம்பெற்றன.

Donald Trump succeeded
Donald Trump succeeded

டெல்லி ராஷ்டிரபதி பவனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து மெனுவில் விலை உயர்ந்த மிகவும் சுவை மிகுந்த இமயமலை காளான், மட்டன் பிரியாணி உள்ளிட்ட சுவை மிகுந்த உணவுகள் இடம்பெற்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மெக்டொனால்டு உணவுகள் மீதான பிரியம் வெளிப்படையாக தெரிந்தவை என்றாலும் அவருக்கு இந்தியாவில் பாரம்பரிய சுவையான உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இந்த இரவு விருந்து குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தின் உயர் வகை தேநீருடன் தொடங்கியது.


இன்று காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப்பும் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்தை குடியரசுத்தலைவர் இல்லத்தில் சந்தித்தார்கள். அதையொட்டி ஒரு ஆடம்பரமான இரவு உணவு விருந்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மெலனியா, அவரது மகள் மெலனியா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் பிற மூத்த பிரமுகர்களை உள்ளடக்கிய தூதுக்குழுவினர் அனைவருக்கும் அம்யூஸ் பௌச் வழங்கப்படும் என்று என்.டி.டி.வி தெரிவித்தது.

பிரஞ்சு உணவான இது சாப்பிடுவதற்கு முன்பு பசியைத் தூண்டுவது. இதில் பசி தூண்டும் பொருட்களான ஸ்பினாக் பாப்டி, சால்மன் ஃபிஷ் டிக்கா மற்றும் எலுமிச்சை கொத்தமல்லி சூப் ஆகியவற்றைக் கொண்ட உருளைக் கிழங்கு டிக்கி ஆகியவை அடங்கும்.

அடுத்து, அவர்களுக்கு முக்கிய உணவு வழங்கப்பட்டது. இதில் இமயமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட அதிக விலையுயர்ந்த மிகவும் சுவையுள்ள காளான், மட்டன் பிரியாணி (ஆட்டுக்குட்டி பிரியாணி), ‘ரான் ஆலிஷான்’ என்று அழைக்கப்படும் ஆட்டுக் கால்கள், ராஷ்டிரபதி பவனில் சிறப்பு உணவான ரைசினா ஹில் என பெயரிடப்பட்ட ‘டால் ரைசினா’ என்ற உள்நாட்டு சமையல், மற்றும் புதினா ரைதா ஆகியவை இடம்பெற்றன.

மே 30, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவின் போது டால் ரைசினாவும் வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த உணவை தயாரித்த செஃப் மச்சீந்திர கஸ்தூரி இந்த டால் ஒரு வெல்வெட் அமைப்பைக் கொண்டிருப்பதாகவும், மிளகுத்தூள் தூவப்பட்டு லேசாக ஸ்பைசியாகவும் இருக்கும் என்று indianexpress.com-க்கு தெரிவித்திருந்தார்.மேலும், இது லேசான மசாலா மற்றும் சுவை மூலப்பொருளுடன் – கசூரி மெதி இலைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இரவு விருந்தில் இந்தியாவின் சுவைமிக்க ஒரு மெனுவைக் கையாள சமையல் கலைஞர்களுக்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இது வெளிநாட்டு பிரமுகர்களின் சுவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு அமெரிக்க டச்சையும் கொண்டிருந்தது.

டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அளிக்கப்பட்ட இந்த இரவு விருந்தில் அரசியல்வாதிகள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சமையல்காரர் விகாஸ் கண்ணா போன்ற பிரபல நபர்கள் கலந்து கொண்டனர். ராஷ்டிரபதி பவனில் நடந்த இந்த மிகப் பெரிய இரவு விருந்து சிறப்பாக முடிவடைந்தது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Donald trump dinner menu at rashtrapati bhavan

Best of Express