Trump India Visit Latest Updates: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலானியா உடன் இந்தியாவிற்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா-அமெரிக்கா இடையே இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்பு துறை, இரு தரப்பு உறவு உள்ளிட்டவை சார்ந்ததாக இருக்கும். வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. இரவில் ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப் தம்பதியருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் புறப்படுகிறார் டிரம்ப். இந்த பயணத்தால், இருநாடுகளுக்கிடையேயான உறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும், அவரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் டில்லி வருகையையொட்டி, பல்வேறு அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிரம்ப் கான்வாய் செல்லும் வழிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகள் தொடர்ந்து சிசிடிவி உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
டிரம்ப் வருகை live – ஆங்கிலத்தில்
Live Blog
Donald Trump India Visit News Updates: அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணம், அவர் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சிகள் குறித்த லைவ் அப்டேட்டை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
அகமதாபாத் சர்வேதேச விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆஸ்ரமம் செல்லும் டிரம்ப், பின் மோடேரா ஸ்டேடியம் செல்ல உள்ளார். விமானநிலையத்திலிருந்து ஸ்டேடியம் வரையிலான 22 கி.மீ தொலைவை, பிரதமர் மோடியுடன் இணைந்து சாலை மார்க்கமாக, டிரம்ப் கடக்க உள்ளார். இரு மருங்கிலும் 20 ஆயிரம் பொதுமக்கள் கையசைக்க இவர்கள் பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் தாஜ்மஹாலில் இருந்து புறப்பட்டுள்ளனர். பாலம் விமானப்படை நிலையத்தில் இரவு 7.30 மணிக்குள் அவர்கள் டெல்லியை அடைய உள்ளனர்
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் இதை “இந்திய கலாச்சாரத்தின் மிக உயரிய மற்றும் மாறுபட்ட அழகுக்கு சான்று” என்று அழைத்தனர். நினைவுச்சின்னத்தில் பார்வையாளர் புத்தகத்தில் இதை எழுதினார்கள். “தாஜ்மஹால் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் வளமான மற்றும் மாறுபட்ட அழகுக்கு சான்று. இந்தியாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டனர்.
தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், இவான்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் தாஜ்மஹால் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆக்ராவில் தரையிறங்கினர். உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை வரவேற்றனர். அவர்கள் விரைவில் தாஜ்மஹால் பார்வையிடுவார்கள். தாஜ் சென்று கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது டிரம்ப் ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டலில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “இன்று இந்தியா ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பும் உலக சாதனையை உருவாக்குவது மட்டுமல்லாமல், விரைவான நிதி சேர்க்கை பற்றிய உலக சாதனையையும் உருவாக்கியுள்ளது” என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “பாகிஸ்தானுடனான எங்கள் உறவு மிகச் சிறந்த ஒன்றாகும். இந்த முயற்சிகளுக்கு நன்றி நாங்கள் பாகிஸ்தானுடனான பெரிய முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காணத் தொடங்கியள்ளோம்” என்றார்.
“இந்தியா மனிதகுலத்திற்கு நம்பிக்கையைத் தருகிறது. வெறும் 70 ஆண்டுகளில், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறியுள்ளதுடன், உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் கீழ், இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. மேலும் 300 மில்லியனுக்கும் அதிகமான இணையம் கிடைத்துள்ளது. இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய நடுத்தர வர்க்கத்தின் வீடாக மாறும். ஈர்க்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்தியா ஒரு ஜனநாயகமாகவும் சகிப்புத்தன்மையுள்ள நாடாகவும் சாதித்துள்ளது. இந்தியாவின் சாதனை நிகரற்றது” என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “தீவிர இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளன. எனது நிர்வாகத்தின் கீழ், ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் இரத்தவெறி கொலையாளிகள் மீது அமெரிக்க இராணுவத்தின் முழு அதிகாரத்தையும் கட்டவிழ்த்துவிட்டோம். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பிராந்திய கலிபா 100% அழிக்கப்பட்டுள்ளது. அல் பாக்தாதி இறந்துவிட்டார்” என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புகையில், இந்தியாவுக்கு இந்த கிரகத்தின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் சில இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா எதிர்நோக்குகிறது. இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய ஆயுதங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதனை இப்போது நாங்கள் இந்தியாவுடன் கையாள்கிறோம்” என்கிறார்.
“முதல் பெண்மணியும் நானும் உப்பு அணிவகுப்புக்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தியின் ஆசிரமத்தைப் பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைந்தோம். நாளை, இந்த மாபெரும் நபரின் நினைவாக டெல்லியில் மாலை அணிவிப்போம். இன்று, தாஜ்மஹால் என்ற சின்னமான நினைவுச்சின்னத்தை பார்வையிடுவோம்” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பாலிவுட் மற்றும் பங்க்ரா பற்றி பேசினார். “உலகெங்கிலும் உள்ள மக்கள் பாலிவுட் படங்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்றார்.
“இந்தியா எப்போதும் போற்றப்படும் நாடு, கோடிக்கணக்கான இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இங்கே வழிபடுகிறார்கள். ஒரு சிறந்த இந்திய தேசமாக நீங்கள் எப்போதும் வலுவாக நிற்கிறீர்கள்” என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.
“பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்கள் உயர்வு பற்றிய நம்பமுடியாத கதை உங்களிடம் உள்ளது” என்று டிரம்ப் மேலும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றிய போது, “அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு விசுவாசமாக இருக்கும். நீங்கள் அமெரிக்க மக்களுக்கு ஒரு பெரிய மரியாதை செய்துள்ளீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கு நாங்கள் எப்போதும் நன்றி செலுத்துவோம். பிரதமர் மோடியின் வாழ்க்கை இந்த தேசத்திற்கான வரம்பற்ற வாக்குறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர் இளைஞராக இருந்தபோது, ஒரு உணவு விடுதியில் பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்வேன், அவர் மிகவும் கடினமானவர். இன்று, அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்” என்றார்.
“ஐந்து மாதங்களுக்கு முன்பு, டெக்சாஸில் உள்ள ஒரு மாபெரும் கால்பந்து மைதானத்தில் அமெரிக்கா உங்கள் மாபெரும் பிரதமரை வரவேற்றது, இன்று, அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா எங்களை வரவேற்றது” என்று டிரம்ப் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது” என்றார்.
“நமஸ்தே டிரம்ப்” நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும்” என்றார்.
இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் உறவுகள் இனி வழக்கமான உறவுகள் அல்ல என்று கூறிய பிரதமர் மோடி, “இது குஜராத், ஆனால் முழு நாடும் உங்களை வரவேற்பதில் உற்சாகமாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நான் வரவேற்கிறேன். குஜராத்தில் இருந்தாலும், நீங்கள் இங்கு காணும் உணர்வுகள் இந்தியாவிலிருந்து வந்தவை” என்றார்.
நமஸ்தே டிரம்ப் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஐந்து மாதங்களுக்கு முன்பு, நான் ஹவுடி மோடியுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். இன்று, எனது சிறந்த நண்பர் டிரம்ப் இந்தியாவில் அகமதாபாத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ உடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்” என்றார். ‘இந்தியா- அமெரிக்கா நட்பு பல்லாண்டு நீடிக்க வேண்டும்’ என்று கூட்டத்தினரை பார்த்து கோஷம் எழுப்பச் செய்தார் பிரதமர் மோடி.
மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதிக்கு, நாளை ( 25ம் தேதி) அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தர உள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதலே தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொடேரா ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி இன்னும் சிறிதுநேரத்தில் துவங்க உள்ளது. மொடேரா ஸ்டேடியம் முழுவதும் பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் பாரத் மாதா கி ஜெய் கோஷம் எழுப்பியவாறு உள்ளனர்.
சபர்மதி ஆஸ்ரமத்தில் உள்ள வருகைப்பதிவேட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சிறந்த நண்பர் மோடிக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சபர்மதி ஆஸ்ரமம் சென்ற டிரம்ப், அங்குள்ள காந்தியின் போட்டோவிற்கு மாலை அணிவித்தார். பின் டிரம்ப், மெலானியா டிரம்ப், அங்குள்ள ராட்டையில் நூல் சுற்ற முயற்சி செய்தனர். அவர்களுக்கு ஆஸ்ரம நிர்வாகிகள் உதவி செய்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையால், இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சமர்பதி ஆஸ்ரமம் சென்றுகொண்டிருக்கிறார். சபர்மதி ஆஸ்ரமத்தில், டிரம்ப் 15 நிமிட காலம் இருப்பார் என்று ஆஸ்ரம செயலாளர் அம்ருத் மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமானநிலையம் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி கட்டித்தழுவி வரவேற்றார். உடன் வந்த மெலானியா டிரம்பையும் மோடி வரவேற்றார்.
இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது, அதிபராக இந்தியாவுக்கு முதல்முறை ஆகவும், தனிப்பட்ட விஷயமாக நீண்டநாட்களுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய மக்களை பார்க்கையில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியா உடனான நட்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, பிரதமர் மோடி வரவேற்றார். டிரம்ப் உடன் மெலானியா டிரம்ப், இவாங்கா டிரம்ப் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, டிரம்ப் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கு உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் மேடையை சுற்றி சிறப்பு புல்லட் புரூப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் குஜராத் வருகையையொட்டி, அங்குள்ள சேரிப்பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு மறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பகுதியை டிரம்ப் – மோடி கடந்து செல்ல உள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள சுவரின் அருகே, போலீசாரே பேரிகார்டாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இன்னும் சிறிதுநேரத்தில், அகமதாபாத் விமானநிலையத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தரையிறங்க உள்ளார். பிரதமர் மோடி, விமான நிலையத்தில் உள்ளார். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள சமயத்தில், மும்பை செல்லும் கோ ஏர் விமானம், பைலட் இன்றி, நின்று கொண்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள மொடேரா ஸ்டேடியம் இன்னும் சிலமணிநேரங்களில் திறந்துவைக்கப்பட உள்ளது. பின் அங்கு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் மொடேரா ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவுக்கு வருவதில மகிழ்ச்சி அடைவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தி மொழியில் டுவீட் செய்துள்ளார்.
டிரம்பை வரவேற்பதற்காக, பிரதமர் மோடி அகமதாபாத் வந்தடைந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அகமதாபாத் விஜயத்தை தொடர்ந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட உள்ளார். இதனையடுத்து தாஜ்மகாலில் பொதுமக்கள் பார்வைக்காக செயல்பட்டு வரும் டிக்கெட் கவுண்டர்கள் முற்பகல் 11.30 மணியளவில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபர்மதி ஆஸ்ரமம் வரும் அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்க, காத்திருக்கும் பைபிள் சொசைட்டி அமைப்பை சேர்ந்த குஜராத் கிறித்தவர்கள்
அகமதாபாத்தின் மொடேரா டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை பார்க்க பெருந்திரளான மக்கள், ஸ்டேடியம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணத்தை ஒட்டி, டில்லியின் பல இடங்களில் டிரம்பை வரவேற்கும் வகையிலான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களில் டிரம்ப், மெலானியா டிரம்ப், பிரதமர் மோடி உள்ளிட்டோர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்க டில்லியில் இருந்து பிரதமர் மோடி, ஆமதாபாத் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் விரைவில் ஆமதாபாத்தில் சந்திப்போம் என்று பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.
குஜராத் சபர்மதி ஆஸ்ரமத்திற்கு வருகை தர உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடியை வரவேற்க, சபர்மதி ஆஸ்ரமம பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆமதாபாத் வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க பிரதமர் மோடி ஆமதாபாத் புறப்பட்டார். மோடி – டிரம்ப், சபர்மதி ஆஸ்ரமம், மோடேரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.