Advertisment

நமஸ்தே டிரம்ப்: அமெரிக்க அதிபரை வரவேற்க தயாராகும் ஆக்ரா, அகமதாபாத்; புகைப்படங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறபோது தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதால் தாஜ்மஹாலில் நீர் ஊற்றுகள் சுத்தம் செய்யப்படுகின்றன. ஆக்ராவில் புதியதாக வண்ணம் பூசப்படுகிறது. கடைகளுக்கு ஒரே மாதிரியாக பெயிண்ட் செய்யப்படுகிறது. பழுதடைந்த நடை பாதைகள் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
donald trump, trump india, us-india trade deal, டொனால்ட் டிரம்ப், டிரம்ப் இந்தியா வருகை, மெடேரா விளையாட்டு மைதானம், தாஜ்மஹால், அகமதாபாத், பிரதமர் மோடி, trump india visit, motera stadium, taj mahal, sabarmati ashram, ahmedabad police, photos, india news, Tamil indian express

donald trump, trump india, us-india trade deal, டொனால்ட் டிரம்ப், டிரம்ப் இந்தியா வருகை, மெடேரா விளையாட்டு மைதானம், தாஜ்மஹால், அகமதாபாத், பிரதமர் மோடி, trump india visit, motera stadium, taj mahal, sabarmati ashram, ahmedabad police, photos, india news, Tamil indian express

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வர உள்ளார். அப்போது, அவர் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதால் தாஜ்மஹாலில் நீர் ஊற்றுகள் சுத்தம் செய்யப்படுகின்றன.

Advertisment

publive-image

ஆக்ராவில் புதியதாக வண்ணம் பூசப்படுகிறது. கடைகளுக்கு ஒரே மாதிரியாக பெயிண்ட் செய்யப்படுகிறது. பழுதடைந்த நடை பாதைகள் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன.

publive-image

குஷ்வா சந்தையில் உள்ள கடைக்காரர்கள் நிர்வாகத்தினால் கடைகளில் தனிப்பட்ட பெயர் பலகைகளை அகற்றி, அவற்றை சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பலகையில் இந்தி மொழியில் நிறுவனத்தின் பெயர் இடம்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

publive-imageடிரம்ப் தாஜ்மஹால் சென்று கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது டிரம்ப் ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டலில் தங்குவதற்கு வாய்ப்புள்ளது.

publive-imageஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆக்ரா வருகைக்கு முன்னதாக, உத்தரப்பிரதேச நீர்ப்பாசனத் துறை அதன் சுற்றுச்சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக புலந்த்ஷாரிலிருந்து யமுனா நதிக்கு 500 கியூசெக் தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. (ஒரு கியூசெக் என்பது சுமார்28 லிட்டர்)

publive-imageஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 50 க்கும் மேற்பட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரில் மிகவும் முக்கிய விருந்தினர்களின் (வி.வி.ஐ.பி) பயணத்திற்காக பி.சி.ஆர் வேன்கள் பைலட் வாகனங்களாக நிறுத்தப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: ஜாவேத் ராஜா)

publive-imageசாதாரண நாட்களில் பலரும் தாரளமாக போய்வரக்கூடிய அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம், போலீஸ் வேன்கள் மற்றும் நுழைவு வாயிலில் பாதுகாப்பு சோதனைகளுடன் மெட்டல் டிடெக்டர் ஃப்ரிஸ்கிங் மற்றும் பைகளை சோதனை செய்யும் நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

publive-image1.10 லட்சம் பேர் கொள்ளளவு கொண்ட மோட்டேராவில் புதிதாக கட்டப்பட்ட சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மொத்தம் 1,20,000 பேர் வருவார்கள் என்று அகமதாபாத் காவல்துறை எதிர்பார்க்கிறது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: ஜாவேத் ராஜா)

publive-imageஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்க அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சபர்மதியில் காந்தி ஆசிரமம் வரையிலும் மொடேரா மைதானத்திலும் 22 கி.மீ நெடுகிலும் மொத்தம் 15,000 - 20,000 மக்கள் காண்பிக்கப்படுவார்கள் என்று அகமதாபாத் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

publive-image

உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் மொடேரா ஸ்டேடியம் பிரதமர் மோடியின் முன்னிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் திறக்கப்படும். அதைத் தொடர்ந்து அரங்க வளாகத்தில் “கெம் சோ டிரம்ப்” நிகழ்வு நடைபெறும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: ஜாவேத் ராஜா)

publive-imageஅமெரிக்க அதிபர் டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும். பின்னர் அவர்கள் சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்திற்கும் பின்னர் மோட்டேரா மைதானத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: ஜாவேத் ராஜா)

Narendra Modi Donald Trump Taj Mahal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment