டிரம்புக்கு இந்தியாவில இப்படியும் ஒரு ரசிகர் : டிரம்ப் சிலைக்கு தினமும் அபிஷேக ஆராதனை
Trump statue in Telangana : டிரம்ப், இந்தியா வர உள்ள நிலையில், அவரை தான் சந்திக்க மத்திய அரசு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 6 அடி சிலைக்கு தினமும் அபிஷேகம், வழிபாடு நிகழ்த்திவருகிறார் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த புஷா கிருஷ்ணா...
Advertisment
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , அரசுமுறைப்பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வர உள்ளார். குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஜாங்கோன் பகுதியை சேர்ந்தவர் புஷா கிருஷ்ணா. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர பக்தரான இவர், தனது வீட்டின் முன்பு டிரம்ப்பிற்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து, தினமும் வழிபாடு நடத்தி வருகிறார்.
இது பற்றி அவர் கூறுகையில், இந்தியா-அமெரிக்க உறவு பலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். டிரம்ப் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் விரதம் இருக்கிறேன். எந்த வேலையை துவங்குவதற்கு முன்பும் அவரது படத்தை வைத்து வழிபட்ட பிறகு துவங்குவது எனது வழக்கம்.
கிருஷ்ணாவின் நண்பர் ரமேஷ் ரெட்டி கூறுகையில், அவரது உண்மையான பெயர் புஷா கிருஷ்ணா. ஆனால் அவர் டிரம்ப்பிற்கு மீது கொண்ட தீவிர பக்தி மற்றும் அவரை வழிபட துவங்கியது முதல் கிராமத்தினர் அனைவரும் அவரை டிரம்ப் கிருஷ்ணா என்றே அழைக்கின்றனர். அவரது வீட்டையும் டிரம்ப் வீடு என்றே சொல்கிறார்கள். டிரம்ப் மீதான பக்தியை அனைவரும் பாராட்டுகின்றனரே தவிர, யாரும் தடை சொல்லவோ எதிர்க்கவோ இல்லை என்றார்.
கோரிக்கை : டிரம்ப், இந்தியா வர உள்ள நிலையில், அவரை தான் சந்திக்க மத்திய அரசு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.