ட்ரம்ப் வருகை: கை மேல் ‘பலனாக’ 6 அணு உலைகள், தயாராகும் ஆந்திரா

வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஆறு அணுசக்தி உலைகளை அமைப்பதற்கான 'திட்ட முன்மொழிவு'(project proposal) குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

By: Updated: February 24, 2020, 12:11:21 PM

வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஆறு அணுசக்தி உலைகளை அமைப்பதற்கான ‘திட்ட முன்மொழிவு’ (project proposal ) குறித்த அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வருகையின் போது எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தத்தைத் தொடங்குவதற்கான களத்தை அமைப்பதால், கடலோர ஆந்திராவில் இதற்கான திட்டப்பணிகள் விரைவில் தொடங்க வழி வகுக்கும்.

பிட்ஸ்பர்க்கை தளமாகக் கொண்ட வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தில் உலகளவில் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். மேலும் இது அமெரிக்க அணுசக்தித் துறையின் ஒரு முன்னோடியாக விளங்குகின்றது.

விசாகப்பட்டினத்திலிருந்து 260 கி.மீ தூரத்தில் கிழக்கு ஆந்திர கடற்கரையில் உள்ள கோவாடாவில் இந்த திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1208 மெகாவாட் (மெகா வாட் மின்சார) திறன் கொண்ட தலா ஆறு ஏபி -1000 அணு உலைகள் அமைக்கப்படும். இந்திய அரசின் நிர்வாக ஒப்புதல், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைத் தொடர்ந்து இதற்கான செலவு விவரங்கள், கால வரைமுறைகள் குறித்த விவரங்கள்  அறிவிக்கப்படும்.

ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில்  தற்போது தடைசெய்யப்பட்ட துறைகளின் பட்டியலில் அணுசக்தி துறை உள்ளது. தடை பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய அணுசக்தி துறை, சில நாட்களுக்கு முன்பு  இந்திய அணுசக்தி ஆணையத்திடம் விவாதம் நடத்தியது.    வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தோடு செய்யக் கூடிய  வணிக ஒப்பந்தத்தின் அறிகுறியாக இந்த விவாதம் காணப்படுகிறது.

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய விரிவான கேள்விகளுக்கு இந்திய அணுசக்தி துறை தலைவர்  பதிலளிக்கவில்லை.

மே 2017 இல், மத்திய அமைச்சரவை வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் ஆறு ஏபி 1000 அணு உலைகள் நிறுவுவதற்கு “கொள்கையளவில்” ஒப்புதல் அளித்தது.

ஒரு வெளிநாட்டு ஒத்துழைப்புடன் அணுசக்தி உலைகளை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு (Project proposal ) நிலைக்கு வருவது சாதாரண காரியமில்லை. பொதுவாக, ஒரு திட்ட முன்மொழிவு : தொழில்நுட்பம், வணிகம், சட்ட நெறிமுறை, ஒழுங்குமுறை போன்ற  சிக்கல்களை உள்ளடக்கியது. அவை முடிவுக்கு வர நேரம் எடுக்கும். ஆனால், தற்போது திட்ட முன்மொழிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாரக்ப்படுவதால் இந்த அணுசக்தி மிஷன் மோடில் செயல்படுத்தப்படும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்த்தோடு அமைக்கப்படும் ஏபி-1000 அணு உலைகள், ரஷ்யாவுடன் இணைந்து தமிழ்நாடு குடங்குளத்தில் அமைக்கப்பட்டதைப் போன்ற லைட் வாட்டர் ரியாக்டர்ஸ் வகையாகும்.

ஆறு உலைகளை உருவாக்குவதற்கான ஆரம்ப ஒப்பந்தம்  2016 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. இந்தியா-அமெரிக்கா உடனான அணுசக்தி உறவு, 2008 ஆம் ஆண்டில்  கையெழுத்திடப்பட்ட இந்தோ-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தால் முக்கியத்துவம் பெற்றது.

எவ்வாறாயினும்,வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் 2017 நடுப்பகுதியில் தான் திவால் ஆகியதாக வங்கியிடம் அறிவித்தது. இதனால், இந்தியாவுடனான ஆறு அணு உலைகள் திட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்த சூழ் நிலையில் தான்,கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில்  வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தை வாங்கியது. இதனால், 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்திய அரசு அணு உலைகள் குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியது.

அமெரிக்க உலைகளை இந்தியா பெரும்பாலும் தவிற்பதற்கு ஒரே காரனம் உயர் திட்டச் செலவுகள். இதனால், பேச்சு வார்த்தைகளில் திட்ட செலவுகளை குறைக்க இந்திய தரப்பு அதிக கவனம் செலுத்திவருகின்றது. எபி -1000 அணு உலைகளின் விலை, ரஷ்யர்களால் கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு புதிய ‘VVER’ உலை (3,4 ) பொருந்து வகையில் இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எண்ணம்.

வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தை கெனடா நாட்டின் நிறுவனம் வாங்குவதற்கு முன்பு, அது தோஷிபாவுக்குச் சொந்தமாக இருந்தது. இதன் மூலம் முக்கிய மூலப்பொருட்கள் அனைத்தையும்  ஜப்பானில் இருந்து கொள்முதல் செய்ய அமெரிக்க நிறுவனத்தை உறுதிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியா இருந்தது . மலிவான கடன்கள் மூலம் திட்டச் செயல்களை குறைக்க முடியும் என்று ஒரு அதிகாரி சுட்டிக் காட்டினார்.

புதைபடிவ எரிபொருட்களின் (Fossil Fuel ) பங்களிப்பைக் குறைப்பதற்காக,  நாட்டின் அணுசக்தி திறனை 2024 ஆம் ஆண்டளவில் மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்பது இந்திய  அரசாங்கத்தின் திட்டம்.

வெஸ்டிங்ஹவுஸின் புதிய உரிமையாளர் ஒரு கனேடிய நிறுவனம் என்பதால், இந்த வணிக ஒப்பந்தம் இந்தியாவின் அணு உலை தொழில்நுட்பத்தின் ஒரு முழுமையை சுட்டிக் காட்டுகின்றது.

இந்தியாவின் அணுசக்தி பரிணாம வளர்ச்சியில் கனடாவின் பங்கு மிக முக்கியம். 1954 ஆம் ஆண்டில் இந்திய CIRUS அணு உலையை வழங்கியதே கெனடா தான். இருப்பினும் , 1974 ஆம் ஆண்டில் இந்தியா அமைதியான அணுசக்தி சோதனையை மேற்கொண்ட பின்னர் அணுசக்தி வன்பொருள் மற்றும் யுரேனியம் ஏற்றுமதியை கெனடா முற்றிலுமாக நிறுத்தியது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Donald trumps india visit big push to six nuclear reactors in andhra171522

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X