ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து ’எனக்கு எதுவும் தெரியாது’; இந்தியாவின் புகாருக்கு டிரம்ப் பதில்

ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் யூரேனியம், உரங்கள் மற்றும் இரசாயனங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் யூரேனியம், உரங்கள் மற்றும் இரசாயனங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
trump

ரஷ்யாவுடன் வர்த்தகமா?- இந்தியா கேள்வி... 'எனக்கு தெரியாது' என ட்ரம்ப் பதிலளிப்பு

ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் யூரேனியம், உரங்கள், ரசாயனங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியா, அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்த நிலையில், ட்ரம்ப் இந்தப் பதிலைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு இந்தியா, "அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து கொண்டு, இந்தியா மட்டும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று சொல்வது நியாயமற்றது" என பதிலடி கொடுத்தது

Advertisment

திங்கட்கிழமை அன்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலைப்பாடு நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்தது. மேலும், "அமெரிக்கா தனது அணுசக்தி துறைக்குத் தேவையான யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, எலக்ட்ரிக் வாகனத் துறைக்குத் தேவையான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது" என இந்தியா சுட்டிக்காட்டியது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்நிலையில், வாஷிங்டனில் நடந்த ஒரு நிகழ்வில், இந்தியாவின் இந்தக் கருத்து குறித்து ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் சரிபார்க்க வேண்டும், பிறகு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.

Advertisment
Advertisements

முன்னதாக, ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அதை அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாகவும் இந்தியாவைக் குற்றம்சாட்டினார். இதன் காரணமாக, இந்தியா மீது “கடுமையான” வரிகளை விதிப்பேன் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இது குறித்துப் பேசிய அவர், விரைவில் ரஷ்ய எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பது குறித்து முடிவெடுப்பேன் என்றார்.

அதே நிகழ்வில், ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை, "நான் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்" என்று கூறினார். கடந்த மே 10-ம் தேதி முதல் 30-க்கும் மேற்பட்ட முறை அவர் இந்தக் கருத்தை தெரிவித்து வருகிறார். ஆனால், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சண்டை நிறுத்தம், இரு நாடுகளின் இராணுவத் தளபதிகளுக்கு (DGMOs) இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சாத்தியமானது என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

“கடந்த 5 மாதங்களில் நான் 5 போர்களை நிறுத்திவிட்டேன். கடந்த 2 அல்லது 3 மாதங்களில் நடந்த போர்களை நீங்கள் பாருங்கள், அது ஆச்சரியமானது. நான் இப்போது உக்ரைன் போரை நிறுத்த முயற்சிக்கிறேன்," என்று அவர் கூறினார். மேலும், "நான் நிறுத்திய மற்ற போர்கள், இந்தியா-பாகிஸ்தான் உட்பட, சில நாட்களில் நிறுத்தப்பட்டன. முழுப் பட்டியலையும் நான் சொல்ல முடியும், அது உங்களுக்குத் தெரியும்" என்றும் அவர் கூறினார்.

Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: