அக்டோபர் 5 சபரிமலை நடை திறப்பு : சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லத் தடையில்லை என்ற வரலாற்றுத் தீர்ப்பினை அறிவித்தது உச்ச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டது. சில பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய முற்பட்டனர்.
அக்டோபர் 5 சபரிமலை நடை திறப்பு
ஆனால் போராட்டக்காரர்கள் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பத்தினம்திட்டா, எருமேலி, சபரிமலை ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இம்மாதத்தில் நாளை (05/11/2018) ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை விவகராம் தொடர்பாக செய்திகள் சேகரிக்க பெண் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம் என ஊடகத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது கேரள இந்து அமைப்பினர்.
ஊடகத்துறைக்கு சபரிமலை கர்மா சமிதி, விஷ்வ ஹிந்து பரிஷாத், மற்றும் இந்து ஐக்யவேதி போன்ற இந்து அமைப்புகளின் சார்பில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் மண்டல பூஜைகளுக்காக அக்டோபர் 17ம் தேதி தொடங்கி அக்டோபர் 22ம் தேதி வரை நடை திறக்கபப்ட்டது. ஆனால் அந்த சமயத்தில் எந்த பெண்களாலும் கோவிலுக்குள் நுழைய இயலவில்லை.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சபரிமலை விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பெண் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் வந்த வாகனங்களில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டது. நாளை கோவில் நடை திறக்க இருப்பதை முன்னிட்டு நிலக்கல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகளுக்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Kerala: Security deployed at Nilakkal base camp as #SabarimalaTemple will open for a day tomorrow pic.twitter.com/OdMnb3j5H7
— ANI (@ANI) 4 November 2018
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திர திருநாள் பலராம வர்மா அவரின் பிறந்தநாளை முன்னிட்டு சித்திர ஆட்டவிஷேசம் நடத்தப்படும். அதனை சிறப்பிப்பதற்காக நாளை மாலை நடை திறக்கப்பட்டு மீண்டும் செவ்வாய் கிழமை அன்று இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. மீண்டும் நவம்பர் 17ம் தேதி ஐயப்பனின் நடை தொடந்து 3 மாதம் பக்தர்களின் வருகைக்காக திறக்கப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.