Doordarsan Cameraperson Video : சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20ம் தேதிகளில் நடைபெறும் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பரில் நடைபெற இருக்கிறது.
தேர்தல் தொடர்பான செய்திகளை சேகரிக்க புகழ்பெற்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் குழு ஒன்று சத்தீஸ்கரில் இருக்கும் தந்தேவாடா மாவட்டம், அரண்பூர் என்ற கிராமத்திற்கு சென்றிருக்கின்றனர். தேர்தல்கள் தொடர்பாக அம்மாநிலத்தில் ஆங்காங்கே நக்சல்கள் தாக்குதல்கள் நடப்பது வழக்கம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல் : Doordarsan Cameraperson Video Found
இப்படியாக நடைபெற்ற வன்முறையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்த கேமராமேன் மற்றும் இரண்டு காவலர்கள் மாவோய்ஸ்ட் தாக்குதல்களால் பலியானர்கள். இரண்டு பாதுகாப்பு காவலர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
பலியானவர்களின் தகவல்களை வெளியிட்டிருக்கிறது சத்தீஸ்கர் மாநில காவல்துறை. அவர்கள் சப் - இன்ஸ்பெக்டர் ருத்ர பிரதாப், அசிஸ்டண்ட் காண்ஸ்டபிள் மங்களு மற்றும் தூர்தர்ஷனில் வேலை செய்யும் டெல்லியைச் சேர்ந்த அச்சுதானந்த் ஆவார்கள்.
சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல் - தலைவர்கள் கண்டனம்
சத்திஸ்கர் முதல்வர் ராமன் சிங், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த சமூகம் ஒன்று கூடி வந்து, நக்சல்களின் இந்த மோசமான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜ்யவேந்த்ர ரத்தோர் ஆகியோரும் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூர்தர்ஷன் துணை கேமராமேனின் வீடியோ பதிவு
செய்திகள் சேகரிக்கச் சென்ற இடத்தில் இருந்த மற்றொரு கேமராமேன் மோர் முகுத் ஷர்மா நடைபெற்ற தாக்குதலில் உயிர் பிழைக்கமாட்டார் என்று எண்ணி செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
அதில் “இங்கு நக்சல்கள் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. அதில் நான் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாக இருக்கிறது. அம்மா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டும் போதும். சாவின் விளிம்பில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இருந்தும் எனக்கு பயம் ஏதும் இல்லை. இதில் உயிர்பிழைக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்” என்று அவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது.