scorecardresearch

Murder on the menu : கொலைக்கும் கூட “மறுப்பை” விரும்பாத ராஜகோபாலின் வரலாறு

1996ம் ஆண்டு ஜீவஜோதி மீது ஏற்பட்ட ஈர்ப்பு 2001ம் ஆண்டு ஒரு கொலைக்கு வழி வகுத்தது.

Murder on the menu : கொலைக்கும் கூட “மறுப்பை” விரும்பாத ராஜகோபாலின் வரலாறு

Nirupama Subramanian

Dosa king : தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணின் கணவரை 2001ம் ஆண்டு கொலை செய்ததற்காக சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் 2019ம் ஆண்டு சிறைக்கு சென்றார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் நேஷனல் எடிட்டர் நிருபமா சுப்ரமணியன், இந்த பரபரப்பான கொலை குறித்து எழுதிய புத்தகத்தின் சில உள்ளடக்கங்கள் உங்களுக்காக

ஓர் எதிர்விளைவு : 2001ம் ஆண்டில் சமூக வலைதளங்கள் இருந்திருந்தால், ஹேஷ்டேக்குகளும், வைரல் வீடியோக்களும் இருந்திருந்தால், ஒரே மனதாக, முன்னாள் பணியாளரின் மகளிடம் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்ட பாலியல் அத்துமீறல்களில் இருந்து அரை சகாப்தத்திற்கு மேல், சக்தி வாய்ந்த ராஜகோபால் தப்பியிருக்க முடியுமா? ஒரு வேளை, ட்விட்டரிலும், முகநூலிலும் தன்னுடைய கதையை ஜீவஜோதி குறிப்பிட்டிருந்தால் ஒரு கொலை தவிர்க்கப்பட்டிருக்குமா? ஒரு வேளை. ஒரு வேளை அப்படி நடக்காமலும் இருந்திருக்கலாம். அனைத்திற்கும் மேலாக, , இந்தியாவில் #MeToo இயக்கம் பெரும்பாலும் பெரிய நகரங்களில் ஆங்கிலம் பேசும், உயர் பணிகளில் இருக்கும் பெண்களுக்கானதாகவே இருந்திருக்கிறது. 2001ம் ஆண்டு ஜீவஜோதி ராஜகோபலை எதிர்கொண்டிர்க்கிறார். அந்த காலத்தில் ட்விட்டரும் இல்லை, இன்ஸ்கிராம், வாட்ஸாப்பும் இல்லை. அன்று, 20-களில் இருக்கும் பெண், தன்னுடைய பாதுகாப்பு மற்றும் சுய பேணுதலுக்காக நேருக்கு நேர் அந்த ஆணை எதிர்த்து போராடி இருக்கிறார்.

2001ம் ஆண்டில், ஜீவஜோதியை பிரின்ஸிடம் இருந்து பிரித்து, தன்னுடைய மூன்றாவது மனைவியாக இருக்க வைக்க வெளிப்படையாகவும் உறுதியாகவும் இருந்தார் ராஜகோபால். சென்னைப் புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி, காவல்துறை பதிவுகளில் ஜோதிடராக குறிப்பிட்டப்பட்ட அவர், ராஜகோபாலிடம் ஜீவஜோதியின் ஜாதகம் அவருடைய ஜாதகத்துடன் பொருந்துகிறது. அவரை திருமணம் செய்துகொள்வது அவரை சாதனைகளின் சிகரத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத்தான் ராஜகோபால் பின்னர் காவல்துறையிடம் கூறினார். ஜீவஜோதியை தனது மூன்றாவது மனைவியாகக் கொள்வது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பதால் அவரை பொறுத்த வரையில் இந்த கணிப்பு கூடுதல் உறுதிப்பாடு. அது அவருடைய நட்சத்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. கிரகநிலைகள் தான், அவரை ஜீவஜோதியின் பின்னாள் சுற்றவைத்தது என்றார் ஜோதிடர். காவல்துறையினர் நிச்சயமாக இந்த கூற்றை நிராகரிக்கின்றார்கள். அவர்களுக்கு ஜோதிடரும் கூட, ஜீவஜோதியை மணப்பதற்காக ராஜகோபால் மேற்கொண்ட சூழ்ச்சிகளில் பாதிக்கப்பட்டவர் ஆவார். ராஜகோபாலின் முதல் மனைவி வள்ளியம்மாள் கூட இதை உணர்ந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ராஜகோபால் கைது செய்யப்பட்ட பிறகு, ப்ரின்ஸ் சாந்தக்மார் கொலைவழக்குடன் தொடர்புடைய மூன்று காவல்நிலையங்களின் (வேளச்சேரி, நந்தனம், கிண்டி) பொறுப்பாளராக இருந்த உதவி ஆணையர் கே. ராமச்சந்திரனுக்கு ஒரு முறை வள்ளியம்மாளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், அவர் ஒரு பெண் பித்தர் என்று எனக்கு தெரியும். ஆனால் அவரை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவர் ஒரு ஆலமரம் போல. ஜாமீனில் அவர் வெளியே வர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதே சமயத்தில் ராஜகோபாலின் மகன்கள் வளர்ந்துவிட்டனர். மூத்த மகன் சிவக்குமார் ஹோட்டல் மேலாண்மை படிப்பை சுவிட்சர்லாந்தில் படித்துவிட்டு, அன்று சரவணபவன் ஹோட்டலின் ஒரே ஒரு வெளிநாட்டு கிளையாக இருந்த துபாய் ஹோட்டலை நடத்தி வந்தார். 2002ம் ஆண்டு ராஜகோபாலின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அவர் விஜய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமச்சந்திரன் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க மருத்துவமனைக்கு செற போது சிவக்குமாரை பார்த்துள்ளார். துபாய்க்குச் செல்வதற்கு முன்பு தனது தந்தையிடம் விடைபெற்று செல்ல வந்த அவர், பெண்கள் மீது ராஜகோபால் கொண்டிருந்த ஈடுபாடு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். “நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்வேன். அதைப்பற்றி உனக்கு என்ன? என்ற தொனியில் கேள்வி கேட்டு சிவக்குமாரை அடிக்க கையோங்கினார் ராஜகோபால் என்று ராமச்சந்திரன் அன்றைய நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

ராஜகோபால் தன்னுடைய ஊழியர்களுக்கு செய்த அதிகப்படியான நல உதவித்திட்டங்கள், அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் பெரும் ஆற்றலை பயன்படுத்த உதவியது. ஏற்கனவே தன்னுடைய ஹோட்டலில் பணியாற்றிய சமையற்காரர் கணேஷ் ஐயரை மிரட்டி அவருடைய மனைவி கிருத்திகாவை சரணடைய வைத்தது, அவர் விரும்பும் எந்த பெண்ணையும் பெற முடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.

2001ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் கைது செய்யப்படும் வரை அவருடைய ஒற்றை குறிக்கோளாக இருந்தது அந்த ஆண்டின் இறுதிக்குள் ஜீவஜோதியை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான். ஜீவஜோதியின் கணவர் ப்ரின்ஸ், அவர் மீது ஜீவஜோதி வைத்திருந்த காதல், எக்காரணம் கொண்டும் அந்த திருமண உறவு முறிந்துவிடக் கூடாது என்பதில் அவர் கொண்டிருந்த தீர்மானம் ஆகியவை, அவரின் திட்டங்களுக்கு குறுக்காக வந்து விழுந்தன.

அந்த ஆண்டு இறுதிக்குள், ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் என்ன நடக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். வெற்றி மீது நாட்டம் கொண்ட நபர் என்ற சுயசரிதைக்கு சொந்தக்காரராக இருந்த அவர், ஜீவஜோதியாலோ அல்லது அவரது கணவராலோ தடுக்கப்படப் போவதில்லை என்றும் மறுப்பு என்ற பதிலுக்கு இடமே இல்லை என்றும் நம்பினார். ப்ரின்ஸ் அந்த வழியில் குறுக்கே வந்தால் அது அவருக்கு கெட்ட நேரம். அவர் போக வேண்டியது தான். அப்படித்தான் ராஜகோபால் பார்த்ததாகத் தோன்றியது. 1996ம் ஆண்டு ஜீவஜோதி மீது ஏற்பட்ட ஈர்ப்பு 2001ம் ஆண்டு ஒரு கொலைக்கு வழி வகுத்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Dosa king who wouldnt take no for an answer even if it meant murder