/indian-express-tamil/media/media_files/2025/04/19/xwBP5w8A15BVbxb1NgsW.jpg)
பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய ஆஞ்சியோ பிளாஸ்டியின் தந்தை டாக்டர் மேத்யூ சாமுவேல் காலமானார்
இந்திய ஆஞ்சியோ பிளாஸ்டியின் தந்தை என்று அழைக்கப்படும் பிரபல இருதயநோய் நிபுணர் மேத்யூ சாமுவேல் களரிக்கல் நேற்று (ஏப்ரல் 18)காலமானார். அவருக்கு 70 வயது. உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
ஜனவரி 6, 1948-ல் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் பிறந்த இவர், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின் சென்னையில் இருதயவியலில் முதுகலை மற்றும் நிபுணத்துவம் பெற்றார். அமெரிக்காவில் ஆண்ட்ரியாஸ் க்ரூன்ட்ஸ்டிக் என்ற பயிற்சி பெற்றபின் 1985-ம் ஆண்டில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார். அந்நேரத்தில், ஆஞ்சியோபிளாஸ்டி துறையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட இந்தியா 10 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகவும், எனவே, இந்தியாவில் ஆஞ்சியோபிளாஸ்டி பணிகளை தொடங்க முடிவு செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
1986-ல் 18 நோயாளிகள் இவரிடம் சிகிச்சை பெற்றனர். அடுத்தாண்டு, இந்த எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. இதய நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையை தார்மீக கடமை மற்றும் அர்ப்பணிப்பு என்று தான் உணர்ந்ததாக கூறினார். ஆஞ்சியோபிளாஸ்டியை நிறுவிய சாதனை பணத்தால் வாங்க முடியாதது" என்று அவர் கூறினார். தொடர்ந்து பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அபுதாபி, மஸ்கட், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஆஞ்சியோபிளாஸ்டி திட்டங்களை உருவாக்க உதவினார். ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சையில் நிபுணராக விளங்கியதால் அதன் தந்தை என்று அழைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
1996-ல் டாக்டர் பி.சி.ராய் விருது மற்றும் ஜூன் 2003-ல் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் டாக்டர் ஆஃப் சயின்ஸ் (கௌரவ கௌரவம்) உள்ளிட்ட பல விருதுகளையும் கலரிக்கல் பெற்று உள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள புனித பீட்டர்ஸ் மார் தோமா தேவாலயத்தில் ஏப்ரல் 21-ம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி சென்னையில் சேத்துப்பட்டு மார்தோமா சிரியன் கிறிஸ்தவ தேவாலயத்தில் நினைவு ஆராதனை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.