உலகையே அச்சுற்றுத்திவரும் ஒமிக்ரான் கொரோனா குறித்து அரசின் விஞ்ஞானிகளுக்கு முதலில் தெரியப்படுத்தியவர் தென்னாப்பிரிக்கா மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி. அவர் ஒமிக்ரான் தொற்றை முதன்முதலில் கண்டறிந்தது குறித்தும், தென்னாப்பிரிக்காவில் டெல்டாவிற்கு பதிலாக ஒமிக்ரான் நுழைந்தது குறித்தும் நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த அமர்வை மூத்த ஆசிரியர் அனுராதா மஸ்கரென்ஹாஸ் நெறிப்படுத்தினார்.
அனுராதா மஸ்கரென்ஹாஸ்: புதிய மாறுபாடு, லேசான பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. அப்படியிருக்கையில், உங்கள் கவனத்தை ஈர்த்தது எது? ஏதோ வித்தியாசமானது என்பதை உங்களுக்கு உணர்த்தியது எது?
நான் ஒரு பொது பயிற்சியாளர். பீட்டா மற்றும் டெல்டா அலைகளின் போதும், நோயாளிகள் வர அனுமதித்தோம். இது வைரஸ் மாறுபாடுகள் உடலை எவ்வாறு தாக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் பெரிதும் உதவும் என்று நினைத்தோம்.
எட்டு வாரங்களாக டெல்டா அலையிலிருந்து விடுப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் காலை ஒரு இளைஞன் ஒருவர் உடல்நலப் பாதிப்புடன் வந்தான். அவனுக்கும், குடும்பத்தினருக்கும் சோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. அன்றைய தினமே, டெல்டாவிலிருந்து மிகவும் வித்தியாசமான அறிகுறிகளுடன் கூடிய மற்ற நோயாளிகளையும் பார்த்தேன்.
பெரும்பாலும் உடல் வலி, முதுகுவலி, தலைவலி, மார்பு வலி, தொண்டை அரிப்பு மற்றும் லேசான மூக்கு ஒழுகுதல் போன்ற காரணங்களை பார்த்தேன். ஆனால், காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் தேவை யாருக்கும் கிடையாது.
ஆரம்பத்தில், இந்த நோயாளிகளுக்கு டெல்டா நெறிமுறையைப் தான் பின்பற்றினேன். அதாவது, டெல்டாபடி, நோயாளிகளை சிறிது நாள்கள் கழித்து மீண்டும் பார்க்க வேண்டும். ஏனென்றால், 7 முதல் 10 நாள் இடைவெளியில் அவர்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. ஆனால், ஆச்சரியமாக ஒரு வாரத்திற்கு பிறகு, நான்கு பேர் மட்டுமே என்னை பார்க்க வந்தனர். மற்றவர்களின் கேட்டால், தற்போது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
அமிதாப் சின்ஹா: ஒமிக்ரான் மாறுபாடு குறித்து கேள்விப்பட்டுக் கொண்டிருப்பது அது லேசானது. ஆனால் அதே நேரத்தில், விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆதாரங்கள் இன்னும் உறுதியானதாக இல்லை என்று கூறி வருகின்றனர். அப்படியிருக்கையில், எந்த கட்டத்தில் இந்த ஒமிக்ரான் லேசான மாறுபாடு என்று கூறுவதற்கான ஆதாரம் உறுதியானதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இது தீவிர நோயை ஏற்படுத்தாதா?
முதலில், கொரோனா தொற்றின் லேசான நோய் பாதிப்பு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் வரையறையைப் பார்க்க வேண்டும். அதில் தெளிவாக இருக்கிறது. மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றின் அறிகுறிகள், மூச்சுத் திணறல், அசாதாரண மார்பு எக்ஸ்ரே ஆகியவை இல்லையெனில், அவர்களுக்கு வீட்டிலே சிகிச்சையளிக்கலாம். வரையறைபடி பார்த்தால், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் கடுமையான நோய்களைப் பெறுகிறார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பெரும்பாலான நோயாளிகள் லேசான நோய்க்கான வரையறையை கடைபிடிக்கின்றனர். ஒருவேளை நீங்கள் தடுப்பூசி போடாமல் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால், ஏதேனும் வைரஸ் தொற்று கடுமையான நோய்க்கு வழிவகுக்க வாய்ப்புகள் உள்ளன. அதைத்தான் ஒமிக்ரானில் பார்த்தோம்.
நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், கொரோனா பாசிட்டிவ் விகிதம் அல்லது தினசரி எண்ணிக்கையை பார்க்க வேண்டாம். ஐசியூவில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் என்ன என்பதையும் மட்டுமே நீங்கள் பார்க்க வேண்டும் என்றார்.
அமிதாப் சின்ஹா: ஒமிக்ரான் விவகாரத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்ததை குறித்து தெளிவாக சொல்ல முடியமா? உண்மையில் எத்தனை பேர் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் இருந்தனர்? ஒமிக்ரான் அலை, டெல்டா போல் இல்லை என்பதை கூற எத்தனை இறப்புகள் நிகழ்ந்தன?
ஒமிக்ரான் பாதிப்பு கொண்ட நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் தான் மருத்துவமனைகளில் கடுமையான நோய் தொற்றால் சிகிச்சை பெற்றனர் என்பதற்கு தரவு தெளிவாக உள்ளது. டெல்டா அலையின்போது, ஜூலை 8 ஆம் தேதி மருத்துவமனைகளில் 19,900 பேரும், ஜூலை 14 ஆம் தேதி 17,000 பேரும் இருந்தனர். ஜூலை 10 ஆம் தேதி 2,597 பேர் உயர் சிகிச்சை மற்றும் ICU பிரிவில் இருந்தனர். பின்னர், டிசம்பர் 17 ஆம் தேதி ஒமிக்ரான் அலையின்போது, ஒரு நாளைக்கு 23,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 528 உயர் சிகிச்சை பிரிவிலும், 7,900 பேர் மருத்துவமனைகளிலும் இருந்ததனர். றப்பு விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. சராசரியாக 100 என்கிற கணக்கில் இருந்தது. டெல்டாவுடன் ஒப்பிட்டால், இறப்பு விகிதங்களில் மிகப்பெரிய வித்தியாசத்தை காண முடிந்தது.
கௌனைன் ஷெரிப் எம்: எங்களின் பெரும்பாலான தடுப்பூசிகள் வுஹான் மாறுபாடுடன் பரிசோதிக்கப்பட்டன. எங்கள் பூஸ்டர்களும் பெரும்பாலும் அந்த மாறுபாட்டின் அடிப்படையின் தான் சோதிக்கப்பட்டன. தற்போது, ஒமிக்ரானுக்கான பூஸ்டர்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
நாங்கள் பார்த்த வரை, நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும் போடாவிட்டாலும், உங்களுக்கு லேசான நோய் பாதிப்பு வரும். தடுப்பூசிகள் லேசான நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கப் போவதில்லை, ஆனால் உங்கள் அறிகுறிகள் குறைவாகவே இருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்வது அவசியம்.அதை நேரில் காண முடிந்தது. தடுப்பூசிகள் தற்போதும் உலகிற்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் பூஸ்டர் செலுத்திக்கொள்வர்கள் என்று நாம் கருதவில்லை. எனக்கு இது போதும் என ஒரு கட்டத்தில் மக்கள் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்
பார்த்தா பிஸ்வாஸ்: நீண்ட காலமாக மாஸ்க் அணிந்த உலகத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோமா?
மாஸ்க் அணிவது கட்டாயமாக மாற வேண்டும். வைரஸ் பரவிய சமயத்தில், தென் ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகள் செய்த முதல் பணி, எல்லைகளை மூடியது தான். ஆனால், மக்களை மாஸ்க் இன்றி சுதந்திரமாக நடமாட அனுமதித்து, நோய் பரவலை அதிகரித்தது. எனவே, மாஸ்க் இனிமேல் உங்கள் தினசரி அலங்காரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.