Advertisment

'தரமான கல்வி, மாநில அந்தஸ்து': புதுச்சேரி நாம் தமிழர் வேட்பாளர் வாக்குறுதி

புதுச்சேரி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் சார்பில் களம் காணும் மருத்துவர் மேனகா, “நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும். மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுப்போம்” என்றார்.

author-image
WebDesk
New Update
Dr Maneka is contesting from Puducherry Lok Sabha constituency on behalf of Naam Tamilar Party

புதுச்சேரி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். மேனகா போட்டியிடுகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 Puducherry | Lok Sabha Election | மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் புதுச்சேரியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக உருவாக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் மேனகா உறுதி அளித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்காக தமிழ்நாடு மட்டும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பெண்களும் 20 தொகுதிகள் ஆண்களும் என சம வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Advertisment

புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்ற வேட்பாளராக டாக்டர் மேனகா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, கட்சியின் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மேனகா, “நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும்.

நெடுங்கால கோரிக்கையாக  உள்ள மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுப்போம். மேலும் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக புதுச்சேரி உருவாக்கப்படும்.

சமயம் சாராமல் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்கு உழைப்போம்; அடிதட்டு மக்களுக்கும் உயர்தரமான இலவச மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி கொடுப்போம்” என்றார்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment