Advertisment

பத்மஸ்ரீ விருது பெற்ற புதுவை டாக்டர் நளினி: நோயுற்ற குழந்தைகளுக்கு விருதை அர்ப்பணிப்பதாக அறிவிப்பு

மருத்துவத் துறையில் சாதனை புரிந்ததற்காக மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை ஹிமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சமர்பிப்பதாக மருத்துவர் நளினி தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dr Nalini Padma Sri award dedicate to sick Children, Dr Nalini Padma Sri award, Puducherry Dr Nalini, பத்மஸ்ரீ விருது, புதுவை டாக்டர் நளினி, டாக்டர் நளினி நோயுற்ற குழந்தைகளுக்கு பத்மஸ்ரீ விருது அர்ப்பணிப்பு, Dr Nalini, Padma Sri award

மருத்துவத் துறையில் சாதனை புரிந்ததற்காக மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை ஹிமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சமர்பிப்பதாக மருத்துவர் நளினி தெரிவித்துள்ளார்

Advertisment

மருத்துவத்துறையில் சேவையாற்றியதற்கு புதுச்சேரியை சேர்ந்த நளினி பார்த்தசாரதிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பயின்று அங்கேயே குழந்தைகள் நல மருத்துவராக தனது பணியை தொடங்கியவர். குழந்தைகள் ஹிமோபிலியா நோய் பாதித்து அவதிப்பட்டதை கண்டு, `இந்த நோயால் பாதிக்கப்படுவோர் அனைவருக்கும் மருத்துவம் செய்ய வேண்டும்' என்ற நோக்கில் சேவை செய்ய தொடங்கியவராவார் நளினி பார்த்தசாரதி. ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்துள்ளார்.

இதன்பின்பு டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஹிமோபிலியா சொசைட்டியை புதுச்சேரி அரசின் உதவியுடன் புதுச்சேரியில் துவக்கி வைத்தார். அதன்மூலம் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த 300 நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை கொடுத்து சிகிச்சையளித்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்நாளையும் கண்காணித்து உதவிகள் பல புரிந்து வருகின்றார்.

மத்திய அரசு தனக்கு அளித்த பத்மஸ்ரீ விருதை ஹிமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காணிக்கையாக்குகின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Puducherry Padma Shri Awards
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment