கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பிரஜா தர்பாரை நடத்துவாரா?

Tamilisai Soundararajan: புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியைப் போல் தமிழிசையும் மக்கள் சபையை மீறி தனிச்சையாக செயல்படுவாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Telangana Governor Tamilisai Soundararajan – TN live updates

தெலுங்கானாவில் மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த அம்ஜெத் உல்லா கான் சில நாட்களுக்கு முன்பு அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ட்விட்டரில் ஒரு ட்வீட் அனுப்பியிருந்தார்.

அதாவது, வாரத்திற்கு ஒரு முறையாவது  பொது மக்களின் குறைகளை கேட்க பிரஜா தர்பார்(மக்கள் குறை கேட்கும் நிகழ்வு) நடத்துகங்கள் என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த,  அம்ஜெத் உல்லா கான் அம்மாநில முதல்வரை கடுமையாக விமர்சிப்பவர் என்பது குறிப்பிடத்தகது. உதாரணமாக, சில நாட்களுக்கு முன்பாக அம்மாநில முதல்வரை எதிர்த்து இவ்வாறாக ட்வீட் செய்தார்.

அதாவது,  முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமை செயலகத்திற்கு வந்து பொது மக்களின்  குறைகளை கேட்காமல் உள்ளார் என்பதாக இந்த ட்வீட் உள்ளது.

இந்நிலையில்,  அம்ஜெத் உல்லா கான் த்வீட்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். ” பரிந்துரைக்கு நன்றி. ஏற்கனவே நான் பரிசீலனை செய்து  வருகிறேன்” என்று ட்வீட் அனுப்பியுள்ளார்.

இது தெலுங்கான அரசியலில் அடுத்த சர்ச்சையாக வலம் வருகிறது. புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியைப் போல் தமிழிசையும் மக்கள் சபையை மீறி தனிச்சையாக செயல்படுவாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dr tamilisai soundararajan governor of telangana praja durbar politics duties of tamilisai soundararajan

Next Story
ஜெ.என்.யூவில் ஓங்கிய இடதுசாரிகளின் கைகள்… 13 வருடங்கள் கழித்து எஸ்.எஃப்.ஐ வெற்றி!United Left Panel swept Jawaharlal Nehru University Students’ Union elections
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com