ஹனி ட்ராப் என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட உளவுத்துறை அதிகாரிகளுடன் 'தவறான தொடர்பு' காரணமாக மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படையால் கைது செய்யப்பட்ட சிறந்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர் ஹெச் நவம்பர் மாதம் ஓய்வு பெறவிருந்தார். சாக்ஸபோன், புல்லாங்குழல், தபேலா மற்றும் மிருதங்கம் வாசித்த இந்த விஞ்ஞானி பேசவும் கதை சொல்லவும் விரும்பினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சிறந்த விஞ்ஞானியான பிரதீப் குருல்கர், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட உளவுத்துறை அதிகாரிகளுடன் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த குற்றச்சாட்டின் பேரில், ஹனி ட்ராப் என்று சந்தேகிக்கப்படும் வழக்கில், மே 3-ம் தேதி மகாராஷ்டிராவின் பயங்கரவாதத் தடுப்பு படையால் கைது செய்யப்பட்டார். அவரது சக ஊழியர்களும் நண்பர்களும் அவரை ‘மோதல்களைத் தீர்ப்பதில் வல்லவர், பன்முக விஞ்ஞானி, கதைகளை விரும்பி பேசும் பாஸ்’ என்று பேசுகிறார்கள்.
59 வயதான குருல்கர், டி.ஆர்.டி.ஓ-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (பொறியாளர்கள்) அல்லது ஆர்&டி.இ பிரிவின் இயக்குநராக இருந்தார். இது ராணுவத்துடனான தொடர்புகள் முதல் கள அமைப்புகள் வரை இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து ஏவுகணைகள் வரை ஆயுதக் கிடங்கு, உத்தி சொத்துக்களின் மேம்பாடு உட்பட பல உத்தி முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைக் கையாண்டது. அவர் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, டி.ஆர்.டி.ஓ-வின் கண்காணிப்பு பிரிவு உள் விசாரணை நடத்தியதால், குருல்கர், உள் இடமாற்றத்தில், புனேவில் உள்ள ஆர்மமென்ட் காம்பாட் இன்ஜினியரிங் கிளஸ்டர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். குருல்கர் கைது செய்யப்பட்டதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விஞ்ஞானி குருல்கர் ஹெச் நவம்பரில் உயர்மட்ட விஞ்ஞானி என்ற பதவியுடன் ஓய்வு பெறவிருந்தார் - டி.ஆர்.டி.ஓ படிநிலையில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி அது. உள் இடமாற்றத்தில் அவர் வெளியே மாற்றப்பட்டபோது ஏதோ தவறு இருப்பதாக அவர்கள் சந்தேகப்பட்டதாக அவரது சக ஊழியர் கூறுகிறார்.
“அவர் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஏதோ நடக்கிறது என்று எங்களுக்குத் தெரிந்தது. அப்போது எதிர்பாராத வகையில் உள் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், ஒரு கைது, அதுவும் இது போன்ற ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டது, எங்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் வகித்த பதவிகள் மட்டுமல்ல, அவர் பணியாற்றிய திட்டங்களிலும் டி.ஆர்.டி.ஓ-வில் முக்கியமான நபராக இருந்துள்ளார். எனவே, அவரது கைது கவலையுடன் வருகிறது” என்று குருல்கரின் சக ஊழியரும் ஒரு டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானியுமான ஒருவர் கூறினார்.
“ஒரு வேலையை எப்படிச் செய்வது என்று தெரிந்தவர்” என்று சக ஊழியர் ஒருவர் குருல்கரைப் பற்றிப் பேசுகிறார்.
“டி.ஆர்.டி.ஓ திட்டங்களில் பெரும்பாலும் பல குழுக்கள் இருக்கும், அணுகுமுறையில் எப்போதும் வேறுபாடுகள் இருக்கும். குருல்கர் இந்த மோதல்களைத் தீர்ப்பதிலும், திட்டங்களை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வதிலும் வல்லவர்.” என்று குருல்கர் பற்றி சக ஊழியர் ஒருவர் கூறினார்.
அந்த சக ஊழியர் மேலும் கூறுகையில், “2000-களின் நடுப்பகுதியில், இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சியின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க டி.ஆர்.டி.ஓ ஜி-ஃபாஸ்ட், முன்னறிவிப்பு அமைப்பு குழு மற்றும் தொழில்நுட்பங்கள் என்ற குறியீட்டு பெயரில் ஒரு உயரடுக்கு சிந்தனைக்குழுவை உருவாக்கியது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் சுமார் 6,000 டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10-12 நபர்களில் குருல்கரும் ஒருவர். அவர் டி.ஆர்.டி.ஓ-வின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை - மிஷன் சக்தி மற்றும் அணுசக்தி திறன் கொண்ட அக்னி சீரிஸ் போன்ற பல உத்தி முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணிபுரிந்த குழுக்களில் குருல்கர் முக்கிய உறுப்பினராக இருந்தபோதும், ஆகாஷ் மேற்பரப்பின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு அவரது மிகப்பெரிய பங்களிப்பு இருந்தது என்று அவரது சக ஊழியர்கள் கூறுகிறார்கள். இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் வான் பாதுகாப்பு திறன்களின் முக்கிய சொத்தாக இருக்கும் சர்ஃபேஸ் டு ஏர் மிசைல் (SAM) ஆகியவற்றில் குருல்கர் ஆகாஷ் தரை அமைப்புகளுக்கான திட்டத் தலைவராகவும் குழு மேலாளராகவும் இருந்தார்.
அவர் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, டி.ஆர்.டி.ஓ இணையதளத்தில் இருந்த குருல்கரின் சுயவிவரம் நீக்கப்பட்டது. அதில், அவர் பணிபுரிந்த மற்ற ஏவுகணை அமைப்புகளில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளது - நடுத்தர தூர சர்ஃபேஸ் டு ஏர் மிசைல், நிர்பய் சப்சோனிக் கப்பல் ஏவுகணை அமைப்பு, பிரஹார், விரைவான எதிர்வினை சர்ஃபேஸ் டு ஏர் மிசைல் மற்றும் கூடுதல் நீண்ட தூர சர்ஃபேஸ் டு ஏர் மிசைல், மற்ற சில வற்றிலும் அவர் பணிபுரிந்துள்ளார்.
“ஒரு பயிற்சி பெற்ற மின் பொறியாளராக, அவர் வீடு முதல் ராணுவ பயன்பாடுகள் வரை பெரிய பயன்பாடுகளைக் கொண்ட எலக்ட்ரோ மெக்கானிக்கல் கட்டுப்பாட்டு அமைப்புகளின் துறையில் பல்துறை கண்டுபிடிப்பாளராக இருந்து வருகிறார். நமது அன்றாட வாழ்வில் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டில் அவர் நம்பிக்கை கொண்டவராகவும், தொழில்நுட்பங்களை சுழற்றுவது போலவும் இருந்தார்” என்று ஒரு சக ஊழியர் கூறினார்.
குருல்கரின் சக ஊழியர்கள் அவரை கதைகள் சொல்ல விரும்புபவராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தார் என்று பேசுகின்றனர்.
“கடந்த காலத்தில் அவர் செய்த அனைத்து வேலைகளையும், அவர் (முன்னாள் ஜனாதிபதி மற்றும் டி.ஆர்.டி.ஓ தலைவர்) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் எவ்வாறு நெருக்கமாக பணியாற்றினார் என்பதைப் பற்றி பேச விரும்பினார்” என்று சக ஊழியர் கூறினார்.
மற்றொரு மூத்த டிஆர்டிஓ விஞ்ஞானி, “குருல்கர் பேசக்கூடியவராகவும், சில சமயங்களில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தார். அவர் ஒரு உணர்ச்சிமிக்க சொற்பொழிவாளர், பல்வேறு தளங்களில் டி.ஆர்.டி.ஓ-வின் சாதனைகளைப் பற்றி பேசுவதில் பெருமிதம் கொண்டார். உள்நாட்டு மேம்பாடு (பாதுகாப்பு அமைப்புகள்) மற்றும் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றிலும் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.
டி.ஆர்.டி.ஓ அதிகாரிகளில் இருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசுகையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட உளவுத்துறை செயல்பாட்டாளர்களுடன் குருல்கர் உத்தி முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்ற வழக்குத் தொடர்ந்த கோட்பாட்டின் மீது சந்தேகம் எழுப்பினர்.
“அவர் வைத்திருக்கும் சுயவிவரத்தை கருத்தில் கொண்டு, அவர் ஒரு சமூக ஊடக சுயவிவரம் வழியாக ஒருவருடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பகிர்ந்து கொண்டால், அது ஒரு விஷயம், அது முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், அவர் ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் எனக்கு பலத்த சந்தேகம் உள்ளது. ஒன்று, ஒரு ஆய்வகத்தின் இயக்குநருக்கு தனிப்பட்ட திட்டங்களின் வகைப்படுத்தப்பட்ட விவரங்களுக்கு சிறிய அணுகல் உள்ளது. டி.ஆர்.டி.ஓ அமைப்புகளில் பொதுக் களத்தில் உள்ளவை மற்றும் உண்மையில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் என்ன என்பதை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
டிஆர்டிஓ இணையதளத்தில் குருல்கரின் சுயவிவரம் அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து நீக்கப்பட்டது - உயர் செயல்திறன், உயர்-பவர் சர்வோ டிரைவ் தொழில்நுட்பம் போன்ற பகுதிகளில் அவரது பங்களிப்பை பட்டியலிட்டுள்ளது; மின்சார உந்து தொழில்நுட்பம்; ஏவுகணை குப்பி தொழில்நுட்பம்; சிறிய ஆளில்லா தரை வாகனங்களுக்கான தானாகவே வழிசெலுத்தும் தொழில்நுட்பம்; அபாயகரமான ராணுவ பயன்பாடுகளுக்கான புத்திசாலித்தனமான ரோபோ கையாளுபவர்கள், ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
“பலமான கல்வி மற்றும் கலாச்சார பின்னணி” கொண்ட புனேவில் ஒரு குடும்பத்தில் 1963-ல் பிறந்தார்” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
குருல்கரின் நண்பர் ஒருவர் கூறுகையில், “அவர் 1985-ம் ஆண்டு எலைட் புனே பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அவர் தனது மாமாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி டி.ஆர்.டி.ஓ-வில் சேருவதற்கு முன்பு புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவரது முதல் நியமனம் சென்னையில் 1988-ல் சென்னையில் உள்ள டி.ஆர்.டி.ஓ-வின் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்தது. அவர் 1990-களின் முற்பகுதியில் புனேவுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு சென்றார்.
குருல்கரை தொடர்பு கொள்ள விரும்பும் ஒரு அக்கறையுள்ள நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் நண்பர், அவர் தனது தாத்தா மற்றும் தந்தையின் இசைத் திறனைப் பெற்றதாக கூறுகிறார். அவர் சாக்ஸபோன், தபேலா, மிருதங்கம், புல்லாங்குழல் மற்றும் ஹார்மோனியம் ஆகியவற்றை சமமாக எளிதாகவும் நேர்த்தியாகவும் வாசிப்பார். அவர் இசையின் மீதான தனது அன்பை பல் மருத்துவரான தனது மனைவியுடனும், ரோபோடிக்ஸ் இன்ஜினியரான மகனுடனும் பகிர்ந்து கொள்கிறார்” என்று அந்த நண்பர் கூறினார்.
குருல்கர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 16 வரை பயங்கரவாத தடுப்புச் காவலில் வைக்கப்பட்டார். உளவு பார்த்தல் மற்றும் தவறான தகவல்தொடர்பு தொடர்பான அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் (ஓ.எஸ்.ஏ) விதிகளின் கீழ் குருல்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு படை அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், குருல்கர் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி மெசஞ்சர் தளங்களில் ஒரு பெண்ணின் சுயவிவரத்தைப் பயன்படுத்தி அவர் ஹனி ட்ராப்பில் சிக்கியதாக அவர்கள் சந்தேகிக்கிறார்கள். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் வரை குரல் செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செயல்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.