scorecardresearch

சுக்விந்தர் சிங் சுகு; வீரபத்ர சிங்கின் தடைகளைத் தாண்டி முதல்வரான டிரைவர் மகன்

இமாச்சல பிரதேசத்தின் 15வது முதல்வராக பேருந்து ஓட்டுநரின் மகன் பதவியேற்க உள்ளார்; பத்திரிகையாளராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த முகேஷ் அக்னிஹோத்ரி முதன்முறையாக மாநிலத்தில் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்.

சுக்விந்தர் சிங் சுகு; வீரபத்ர சிங்கின் தடைகளைத் தாண்டி முதல்வரான டிரைவர் மகன்

Amil Bhatnagar , Rajesh Chander Sharma

கூடுதல் தகவல்: பிரின்ஸ் தந்தா

விண்கல் எழுச்சி என்று ஒன்று இருந்தால், அது இதுதான். இமாச்சல பிரதேசத்தின் 15வது முதல்வராக பேருந்து ஓட்டுநரின் மகன் பதவியேற்க உள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் 15வது முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் ஏணியின் பல படிகளைத் தொடும் அளவுக்கு யாரும் இல்லை. 58 வயதான சுக்விந்தர் சிங் சுகு, 1981ல் சிம்லாவில் உள்ள அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் 11ம் வகுப்பில் வகுப்புப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, எல்லா நிலைகளிலும் உயர்ந்து நிற்கிறார். அதன் பிறகு அவர் கீழிறங்கவே இல்லை.

இதையும் படியுங்கள்: நிர்பயா நிதியில் வாங்கப்பட்ட எஸ்.யூ.வி.,க்கள்; ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் பாதுகாப்புக்கு பயன்பாடு

சுக்விந்தர் சிங் சுகு 1989 இல் NSUI இன் மாநிலப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார், இளைஞர் காங்கிரஸின் (1998-2008) மாநிலப் பிரிவுக்கு தலைமை தாங்கினார், 2003 இல் விதான் சபாவில் (சட்டப்பேரவையில்) எம்.எல்.ஏ.,வாக நுழைவதற்கு முன்பு இரண்டு முறை (1992-2002) கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு (2013-2019) தலைமை தாங்கினார். மேலும், இப்போது முதல்வர்!

மார்ச் 27, 1964 இல், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடான் என்ற கிராமத்தில் பிறந்தார், நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், சிம்லாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவரது தந்தை ரசில் சிங் அரசு பேருந்து ஓட்டுநராக இருந்தார். ஒரு மாணவராக இருந்தபோது, ​​அவர் தனது வருமானத்தை ஈடுகட்ட எளிய (வீட்டு ஊழியம்) வேலைகளைச் செய்தார்.

எப்பொழுதும் தான் நினைத்ததை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். சர்ச்சைக்கு இடமில்லாத பிம்பத்தை ஏந்தி, நம்பிக்கையுடன் அரசியல் களத்தில் அணிவகுத்துச் சென்ற அவர், மக்கள் மத்தியிலும் கட்சித் தொண்டர்களுக்குள்ளும் வலுவான ஆதரவுத் தளத்தை உருவாக்கினார். அவர் காந்தி குடும்பத்துடன் நல்லுறவை பேணிக்கொண்டார்.

அவர் எப்போதும் ஆறு முறை முதல்வராக இருந்த மறைந்த வீரபத்ர சிங்கின் எதிர் பக்கத்தில் இருந்தார், ஆனால் எப்போதும் துணிச்சலுடன் தனது நிலைப்பாட்டில் நின்றார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும், அப்போதைய முதல்வர் வீரபத்ர சிங் உடனான கடுமையான உறவால் பதவிக்காலம் குறிக்கப்பட்டது.

“நான் கட்சி சித்தாந்தத்தில் உறுதியாக இருக்கிறேன். இது அனைத்தும் பிரச்சினை அடிப்படையிலானது, நான் அவரை (விர்பத்ர சிங்) ஆதரித்த பிரச்சினைகள் இருந்தன, நான் அவரை எதிர்த்த பிரச்சினைகள் இருந்தன, ”என்று சுக்விந்தர் சிங் சுகு இந்த ஆண்டு மே 13 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் ஒரு ஹவுஸ் மேக்கர். இந்த தம்பதிக்கு டெல்லியில் படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில், மறைந்த வீரபத்ர சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் அரசியலில் சேருவதற்கு முன்பு பத்திரிகையாளராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த முகேஷ் அக்னிஹோத்ரி முதன்முறையாக மாநிலத்தில் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்.

முகேஷ் அக்னிஹோத்ரி தனது முதல் தேர்தலில் 2003 இல் உனா மாவட்டத்தில் உள்ள சந்தோக்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 2007 இல் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஹரோலியில் இருந்து 2012, 2017, 2022 தேர்தல்களில் வெற்றி பெற்றார், இது எல்லை நிர்ணயத்திற்கு முன்பு சந்தோக்கர் என்று அழைக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Drivers son steered to top past virbhadra roadblocks