இம்பால் மேற்கு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செவ்வாய்கிழமை இது "பயங்கரவாதச் செயல்" என்றும் " இத்தகைய கோழைத்தனமான செயல்களை கடுமையாக கண்டித்துள்ளார்".
“ட்ரோன்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது குண்டுகளை வீசுவது பயங்கரவாதச் செயலாகும், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மணிப்பூர் மாநில அரசு இத்தகைய தாக்குதலை தீவிரத்துடன் எடுத்துக் கொள்கிறது மற்றும் பழங்குடி மக்கள் மீதான இத்தகைய பயங்கரவாத செயல்களை எதிர்த்துப் போராட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஆயுதமேந்திய குக்கி குழுக்கள் ட்ரோன்களைப் பயன்படுத்தி கொட்ரூக் பகுதியில் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனா மற்றும் பலர் காயமடைந்தனர்.
கொட்ரூக் என்பது இம்பால் மேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மெய்தி மக்கள் வாழும் கிராமமாகும். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இப்பகுதி தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், மோதல்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
திங்களன்று, இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள சென்ஜாம் சிராங் மனிங் லைகாயில் ட்ரோன்களைப் பயன்படுத்தி இதேபோன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Drone attacks in Imphal West: CM Biren Singh says Manipur ‘will fight such forms of terrorism’
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக பேசுகையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைப்பதை உறுதி செய்தார்.
மெய்தி மற்றும் குக்கி-ஜோமி சமூகத்தினரிடையே சமீபத்திய வன்முறை சம்பவங்கள் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“