ஜிப்மரின் கிராம சமுதாய நலவழி மையத்துக்கு சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் மருந்துகள் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் சமுதாய நலவழி மையம் உள்ளது. இங்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரத்த பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்துச்செல்ல ட்ரோன் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனாஇ ஓட்டம் நாளை (24.01.2024) முதல் தொடங்கப்பட உள்ளது.
இதையொட்டி, சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் மருந்துகள் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் மண்ணாடிப்பட்டு எல்லைக் காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் சிறியரக ட்ரோன் விமானத்தில் அவசரக்கால சிகிச்சைக்கான மருந்துகளை வைத்து அரை மணி நேரத்திற்கு பறக்க வைத்து சோதனை செய்தனர்.
ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரி ராஜ்குமார் சித்தரியா, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி மணிமொழி உள்ளிட்டோர் இந்த சோதனையை பார்வையிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“