Shaju Philip
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷராபுதீன், துபாயில் இருக்கும் அவர் கேரளா திரும்ப திட்டமிட்டதால், வீட்டில் தேவைக்குபோக இருந்த பொருட்களை பாதுகாப்பாக கபோர்டில் வைத்துவிட்டு, பெற்றோரை, அண்ணனின் வீட்டில் விட்டுவிட்டு 7ம் தேதி மதியம் கேரளா கிளம்ப திட்டமிட்டார். மனைவி அமினா ஷெரீன் மற்றும் இரண்டு வயதே ஆன மகள் பாத்திமா இசா உடன், கேரளா திரும்ப ஷராபுதீன் முடிவு செய்திருந்தார். கொரோனா காரணமாக, 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட பின், கேரளா திரும்புவதற்கு முன் விமானத்தில் பாதுகாப்பு கவசங்களுடன் அவர்கள் கடைசியாக எடுத்துக்கொண்ட போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் மரணமடைந்த 18 பேரில், ஷராபுதீனும் ஒருவர். சனிக்கிழமை, ஷராபுதீனின் உடல், பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. பாத்திமா, தொலைவில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமினா, தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷராபுதீன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, துபாயில் பணிபுரிந்து வருகிறார். மனைவி மற்றும் மகள், சில மாதங்களுக்கு முன்னரே துபாய் சென்றிருந்தனர். அவர்களது விசா காலாவதியான போதிலும், கொரோனா காரணமாக விமானச்சேவை நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்கள் துபாயிலேயே இருந்துவந்தனர். விமான சேவை துவங்கிய நிலையில், அவர்கள் கேரளா திரும்புவதாக இருந்தது. கொரோனா தனிமை காரணமாக அவர்கள் மேலும் பாதிக்கப்படுவர் என்பதால், ஷராபுதீன், இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு இவர்களுடனேயே கேரளா திரும்ப முடிவு செய்ததாக ஷராபுதீனின் சகோதரர் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் பலியான 18 பேரில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்தியா திரும்பிய 24 வயதான முகம்மது ரியாஸ், துபாயில் பணி இழப்பு காரணமாக இந்தியா திரும்பிய 55 வயது ஜானகி. எஞ்சிய நாளை இந்தியாவில் கணவருடன் செலவழிக்க திட்டமிட்டு திரும்பிய 51 வயது கே வி லைலாபி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.
திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, கேரளாவுக்கு வருமாறு ரியாஸின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் இந்தியா திரும்ப இயலவில்லை. ரியாசும், நிஜாமுதீனும் துபாயில் பணிபுரிந்து வந்தனர். அங்கு நடந்த விபத்தில் நிஜாமுதீனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக, ரியாசின் சொந்த ஊரான பாலக்காடு, சலாலராபஞ்சாயத்து உறுப்பினர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு பலுசேரி பகுதியை சேர்ந்த ஜானகி, துபாயில் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு சில மாதங்களுக்கு முன் வேலை பறிபோனது. அப்போதே இந்தியா திரும்ப திட்டமிட்ட அவருக்கு விமானசேவை இல்லாததால், கையில் வைத்திருந்த பணத்தை கொண்டு அங்கேயே தங்கியிருந்தார். தற்போது விமான சேவை துவங்கிய நிலையில் இந்த விமானத்தில் வந்தார். விமான விபத்தில் பலியானார் என்று அவரது உறவினர் சாஜூ தெரிவித்துள்ளார். கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் பணத்தேவைக்காக துபாய்க்கு சென்று பணியாற்றினார். தற்போது அவர் திரும்புகையில் கையில் அவரிடம் சுத்தமாக பணமே இல்லை. தன்னார்வலர்கள் அளித்த இடத்தில் அவரின் நல்லடக்கம் நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார்.
மலப்புரத்தை சேர்ந்த லைலாபியின் மகன் 2 நாட்களுக்கு முன் இந்தியா திரும்பியிருந்தார். லைலாபிக்கு இந்த விமானத்தில் தான் டிக்கெட் கிடைத்த இடத்தில் விமானத்தில் பயணித்த அவர் விமான விபத்தில் உயிரிழந்ததாக அவரின் நண்பர் சுபைதா தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - His last photo from Air India Express plane: ‘Back to home’
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.