New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/05/template-3.jpg)
scam, thegidi, tamil movie , travel agency, travel portals, air tickets, penny, money, விமான டிக்கெட், முறைகேடு, rajasthan, parmar, rajpratap parmar,payment gateway
scam, thegidi, tamil movie , travel agency, travel portals, air tickets, penny, money, விமான டிக்கெட், முறைகேடு, rajasthan, parmar, rajpratap parmar,payment gateway
தெகிடி படத்தில், நன்றாக சம்பாதிக்கும் அதேநேரத்தில் யாருமற்ற அனாதைகளாக இருப்பவர்களின் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து அவர்களை திட்டமிட்டு கொன்று அந்த பணத்தை பங்குபோட்டு கொள்வதுபோல, இங்கு நூதன முறையில் விமான டிக்கெட் முறைகேட்டை நிகழ்த்தி பலகோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.
விமான டிக்கெட்களை, சந்தை நிலவரத்தில் அல்லாமல், 80 சதவீதத்தில் தருவதாக கூறி 1 பைசா கூட செலவழிக்காமல், பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த நபரை மும்பபை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாடியா பகுதியை சேர்ந்தவர் ராஜ்பிரதாப் பார்மர். 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராஜ்பிரதாப்பிற்கு கம்ப்யூட்டர் வேலைகள் அனைத்தும் அத்துப்படி. இதனிடையே டிராவல் ஏஜன்சிகளை தொடர்பு கொண்ட ராஜ்பிரதாப் பார்மர், விமான டிக்கெட்களை சந்தை மதிப்பில் இல்லாமல், 80 சதவீதத்தில் வாங்கி தருவதாக பேசி, அவர்களுடன் இணைந்து செயலாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், மும்பையை சேர்ந்த ஒருவர், கோவா செல்வதற்கான டிராவல் ஏஜன்சியிடமிருந்து விமான டிக்கெட் வாங்கியுள்ளார். அவர் டிக்கெட்டை சரிபார்த்தபோது, அதில் தனது மொபைல் போன் எண் மற்றும் இமெயில் தவறாக இருப்பதை அறிந்தார். அதேபால், டிராவல் ஏஜன்டிடம் தான் கொடுத்த பணமதிப்பும், டிக்கெட்டில் இருந்த பணமதிப்பும் வெவ்வேறாக இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின் மும்பை குற்றத்தடுப்பு போலீசில் இதுதொடர்பாக புகார் செய்தார். சதீஷ் தவாரே மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதாங்கர் இப்புகாரை விசாரணை செய்தனர். அவர்கள் நடத்திய தீவிர விசாரணைகளின் பயனாக, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜ் பிரதாப் பார்மர் உள்ளிட்ட 3 பேரை, மும்பை போலீசார் கைது செய்தனர்.
ராஜ்பிரதாப் பார்மர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது, விமான டிக்கெட் கேட்டு டிராவல் ஏஜன்டிடம் தொடர்பு கொள்ளும் நபர்களின் விபரங்களை விமான சேவை வழங்கும் நிறுவனங்களின் இணையதளங்களில் பதிவு செய்வோம். பின் நாங்களாகவே, ஒரு மொபைல் போன் எண் மற்றும் இமெயில் முகவரியை பதிவு செய்வோம். எக்காரணம் கொண்டும் டிக்கெட் பதிவு குறித்த தகவல்களை, வாடிக்கையாளருக்கு தெரியாதவண்ணம் பார்த்துக்கொள்வோம். பயணியரின் எல்லாவிபரங்களும் கொடுத்தபிறகு, பணப்பரிவர்த்தனை பக்கத்தில், submit குடுப்பதற்கு முன்பாக கேன்சல் கொடுத்துவிடுவோம். அந்த பக்கத்தில் தொடர்ந்து cancel மற்றும் escape பட்டனை அழுத்துவதன் மூலம் அந்த பக்கம் freeze ஆகிவிடும். பின் அந்த பக்கத்தின் urlல் success என்று உள்ளீடு செய்து submit செய்தால், நாம் எவ்வித பணமும் செலுத்தாமலேயே டிக்கெட் புக் செய்யப்பட்டு விடும் என்று ராஜ்பிரதாப் பார்மர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
போலிசார் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, ராஜ்பிரதாப் பார்மர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தே மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு 2பேர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கைளயும் கைது செய்துள்ளோம். ரூ. 1 கோடி மதிப்பிலான 700 முதல் 800 டிக்கெட்கள் வரை இந்தமுறையில் புக் பண்ணியிருப்பதாக ராஜ்பிரதாப் கூறியுள்ளார். ஆனால், 1500 டிக்கெட்கள் வரை இந்த முறையில் அவர் புக் பண்ணி தந்திருப்பதாகவும், ரூ. 2 கோடி அளவிற்கு அவர்கள் முறைகேடு செய்திருப்பதாக முதற்கட்ட விசாரைணயில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.