scorecardresearch

டெல்லி ரகசியம்: சிறுமிக்கு டைரி மில்க் கொடுத்த குடியரசுத் தலைவர்… இவரோட பேத்தியா!

முகலாயப் பூங்கா முழுவதும் நீண்ட நேரமாக சுற்றிப்பார்த்தில் சோர்வான ஸ்ரீயாவை உற்சாகப்படுத்த, குடியரசு தலைவர் டைரி மில்க் சாக்லெட் கொடுத்தார்.

டெல்லி ரகசியம்: சிறுமிக்கு டைரி மில்க் கொடுத்த குடியரசுத் தலைவர்… இவரோட பேத்தியா!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , இந்தியாவின் முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரின் அழைப்பின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பணிக்கு விடுமுறை அளித்துவிட்டு, ராஷ்டிரபதி பவனில் உள்ள முகலாயப் பூங்காவுக்கு விஜயம் செய்தனர்.

அப்போது, இந்திய தலைமை நீதிபதி என் வி ரமணாவுடன் ராஷ்டிரபதி பவனுக்கு வந்த அவரது பேத்தி ஸ்ரீயா யர்லகட்டாவுக்கு குடியரசு தலைவர் சாக்லேட் வழங்கியது க்யூட்டான தருணமாக மாறியது. முகலாயப் பூங்கா முழுவதும் நீண்ட நேரமாக சுற்றிப்பார்த்தில் சோர்வான ஸ்ரீயாவை உற்சாகப்படுத்த, குடியரசு தலைவர் டைரி மில்க் சாக்லெட் கொடுத்தார்.

வழி மாறுதல்

மத்தியில் பாஜகவுக்கு மாற்றாகக் கட்டமைக்கும் முயற்சியில் எதிர்க் கட்சிகளின் ஒன்றுதிரளும் முயற்சியுல், காங்கிரஸை தலைமை பொறுப்பில் அமரவைக்க வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இணைவதை விட தலைமையேற்று நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அல்லது தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் முன்னிலை நின்று வழிநடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவிக்கவில்லை. ராவின் கூட்டாட்சி முன்னணி பற்றிய பேச்சும், மாற்றுக் கூட்டணியின் தலைவராக தன்னை முன்னிறுத்தும் பானர்ஜியின் முயற்சியும் மற்ற பணிகளுடன் கலக்கப்படக்கூடாது என சொல்லப்படுகிறது. இந்தப் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர் தான் முன்னின்று நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாக தெரிகிறது.

ஆன்லைன் முன்னுரிமை

கொரோனா மூன்றாம் அலை முடிவுக்கு வருவதையடுத்து, நாட்டின் பல இடங்களில் கல்வி முறை செயல்பாட்டுக்கு வருகிறது. பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால், தொற்றுநோயால் முன்னோடியாக உள்ள ஆன்லைன் கல்வி முறை, அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் இடம்பெற்றிருக்கும்.

இன்று(பிப்ரவரி 21) கல்வி அமைச்சகம் டிஜிட்டல் கல்வி தொடர்பான பல்வேறு பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்த இணையப் பேரவையை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க பேச்சாளராக கலந்து கொள்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: During sc judges visit to mughal gardens president kovind sweet gesture