இந்தியா முழுவதும் 53 உயிர்களை காவு வாங்கிய புழுதி புயல்!!!

இந்தியாவில் ஆந்திரா உட்பட வட மாநிலங்களைத் தாக்கி வந்த புழுதி புயலில் சிக்கி 53 பலியாகியுள்ளனர். மேலும் 65 நபர்கள் காயமடைந்துள்ளனர் என மத்திய நிவாரணத் துறை தெரிவித்துள்ளது.

dust storm

சமீபத்தில் வட மாநிலங்கள் தில்லி, உத்தரபிரதேசம், மேற்குவஙம் உட்பட ஆந்திர பிரதேசத்தில் புழுதி புயல் மற்றும் கன மழை ஏற்பட்டு வருகிறது. இந்தப் புழுதி புயலில் பலரும் சிக்கிக் கொண்டனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

வட மாநிலத்தில் ஏற்பட்ட இந்த இயற்கையின் சீற்றத்தால் இதுவரை 53 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 65 பேர் காயமடைந்துள்ளனர். அதாவது உத்தரபிரதேசத்தில் 39 பேர், ஆந்திராவில் 9 பேர், மேற்கு வங்காளத்தில் 4 பேர் மற்றும் தில்லியில் ஒருவர் என 53 பேர் பலியாகியுள்ளார்கள். பின்னர் காயமடைந்த 65 நபர்களில் 53 பேர் உத்தரபிரதேசம், ஒருவர் மேற்கு வங்காளம்மற்றும் 11 பேர் தில்லியை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வட மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவத்தால் பலரும் தங்களின் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

×Close
×Close