E-Cigarettes ban Nirmala Sitharaman tweets : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று எலெக்ட்ரானிக் சிகெரெட்கள் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்தார். இந்த வகை சிகெரெட்டுகளை பயன்படுத்துவதால், மாணவர்கள், இளைஞர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
E-Cigarettes ban Nirmala Sitharaman tweets
எலெக்ட்ரானிக் சிகெரட்டுகள் புகைத்தால் மட்டும் தான் பாதிப்புகள் உருவாகுமா? புகையிலை பயன்பாட்டையும் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் தானே என்று பலரும் தங்கள் தரப்பு கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மருந்து தயாரிக்கும் நிறுவனமான பயோக்கான் லிமிட்டடின் தலைவர் கிரன் மாசூம்தார்-ஷா, எலெக்ட்ரிக் சிகெரெட் தடை குறைத்து சுகாதாரத்துறை அமைச்சர் பேசுவதற்கு பதிலாக ஏன் நிதி அமைச்சர் பேசுகிறார் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் தரப்பு சந்தேகத்தையும் எழுப்பியிருந்தார். மேலும் நிதிப்பற்றாக்குறை குறித்து முறையான தகவல்கள் தந்து, அதனை சரி செய்வதற்கு பதிலாக ஏன் சிகரெட் தடைப் பற்றி நிதி அமைச்சர் பேச்ய்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
கிரணின் இந்த கேள்விக்கு சற்றும் எதிர்பாராத வகையில் நிர்மலா சீதாராமனே பதில் கூறியது அனைவரையும் சற்று வியப்பில் ஆழ்த்தியது. “நான் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் குறித்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன். அரசு எடுக்கும் அனைத்துவிதமான முயற்சிகளையும் நான் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய வண்ணம் தான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
எப்போதும் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும், அரசின் சாதனைகள் குறித்து மட்டுமே பேசிய நிர்மலா சீதாராமன் “நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் நான் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். அரசு தரப்பில் இருந்து நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பிற்கான முறைகளுக்குள் தான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது என அவர் ட்வீட் செய்துள்ளார்.