Advertisment

இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா?

இதன் மூலம் நேற்று மதியத்திற்கு பிறகு ரூ.859 கோடி வரை லாபத்தை எட்டியுள்ளது இந்நிறுவனங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
E-cigarettes ban

E-cigarettes ban

E-cigarettes ban: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசினார். அப்போது அவர், எலக்ட்ரானிக் சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பயன்பாடு என அனைத்திற்கும் முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டார். இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில், இந்தியாவின் சில முக்கியமான புகையிலை உற்பத்தியாளர்களின் பங்குகள் துரிதமாக அதிகரிக்கத் துவங்கிவிட்டது. மத்திய அமைச்சகத்தின் இந்த ஒரு முடிவினால், நேற்று மட்டும் தங்களின் வர்த்தகத்தில் 1000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

பாம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் சில புகையிலை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மட்டும் 9% வரை உயர்ந்துள்ளது. இ-சிகெரட்டுகள் தயாரிக்கும் நிறுவனமான காட்ஃப்ரே பிலிப்ஸ் (Godfrey Phillips India) நிறுவனமும் கூட இதனால் நேற்று அதிக அளவு பயனடைந்துள்ளது.

ஐ.டி.சி லிமிட்டட் நிறுவனத்தில் இந்திய அரசின் பங்கு 28.64% ஆகும். நேற்று அதன் பங்குகள் 1.03% வரை உயர்ந்துள்ளது. யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் எல்.ஐ.சியும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதால் இந்த முடிவு அரசிற்கு லாபத்தினை அளித்துள்ளது.

இதே போன்று நேற்று ஜெனரல் இன்ஸூரர் ஜி.ஐ.சி, நியூ இந்தியா இன்ஸூரன்ஸ், ஓரியண்டெல் இன்ஸூரன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் 4.36% வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் நேற்று ரூ.859 கோடி வரை லாபத்தை எட்டியுள்ளது இந்நிறுவனங்கள்.

வி.எஸ்.டி நிறுவனங்களின் பங்குகளும் நேற்று ரூ.58.15 வரை உயர்ந்து, ஒரு பங்கின் முகமதிப்பு ரூ. 3560 என்ற நொலையை எட்டியது. இந்நிறுவனத்தில் நியூ இந்தியா இன்ஸூரன்ஸ் 1.53% பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment