Advertisment

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி?

E Voter Card Download: ஸ்மார்ட் வாக்காளர் அடையாள அட்டையை ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினத்தன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கின்றது

author-image
WebDesk
New Update
How to download Digital voter cards election commission of india -டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி?

E Voter Card Download Tamil News: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டைகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டு வருவதால், வாக்களர் அடையாள அட்டையையும் டிஜிட்டல் முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. அதோடு ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் என்பதால், அன்று முதல் இந்த திட்டத்தை அமல் படுத்தவும் முடிவு செய்துள்ளது.

Advertisment

இதற்காக இணைய பக்கம் ஒன்றையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும், இப்போது புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களும் இந்த இணைய பக்கத்தின் மூலம் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

publive-image

 

ஜனவரி 25 முதல் 31 வரை புதிய வாக்களர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களும், பிப்ரவரி 1 முதல் ஏற்கனவே வாக்களர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும் தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அலைபேசி எண்களை வாக்களர் அடையாள அட்டையுடன் இணைக்காதவர்கள் இந்த இணையத்தின் மூலம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் வாக்களர் அட்டைகள் பிடிஎப் வடிவங்களில் (PDF) கிடைக்கும். அதோடு  பதிவிறக்கம் செய்யப்படும் வாக்களர் அடையாள அட்டைகளில் பாதுகாப்பான க்யு ஆர் குறியீடு (QR code) வழங்கப்பட்டுள்ளதால், இதை டூப்ளிகேட் செய்ய இயலாது.

 

publive-image

 

வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முதலில் இந்த இணைய பக்கங்களுக்கு செல்ல வேண்டும்.   (https://voterportal.eci.gov.in/, அல்லது  https://nvsp.in/Account/Login ). பின்னர் அந்த இணைய பக்கத்தில் அலைபேசி எண் அல்லது இ - மெயில் உதவியுடன் புதிய கணக்கை தொடங்க வேண்டும். ஜனவரி 25 காலை 11.45 மணிக்கு மேல் தான் வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்ய இயலும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Election Commission Digital Voter Id
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment