Advertisment

'இதை உங்க அமைச்சரிடம் கேளுங்க..!' பாக்., மீடியாவிடம் சீறிய ஜெய்சங்கர்

பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தான் செய்தியாளரின் கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'இதை நீங்கள் தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள், உங்கள் அமைச்சரிடம் கேளுங்கள்' என்று கூறி சீறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
EAM Jaishankar stern reply to Pak journalist on terrorism question Tamil News

EAM S Jaishankar was responding to a question by a Pakistani journalist on how long South Asia is going to see terrorism disseminating from New Delhi, Kabul, and Pakistan. (Photo: Screengrab from Youtube/ANI)

Jaishankar slams Pakistan over terrorism Tamil News: ஐக்கிய நாடுகள் சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை: சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி’ என்ற தலைப்பில் இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற கையொப்ப நிகழ்வில் நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டார். பின்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செய்தியாளர்களிடம் பேசினார்.

Advertisment

அப்போது, புதுடெல்லி, காபூல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதம் பரவுவதை தெற்காசியா எவ்வளவு காலம் பார்க்கப் போகிறது? என்று பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டார். அதற்கு அவர், இதை நீங்கள் தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள், உங்கள் அமைச்சரிடம் கேளுங்கள்', என்று அந்த செய்தியாளரிடம் சீறினார் அமைச்சர் ஜெய்சங்கர்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “எவ்வளவு காலம் இதை செய்வோம் என்று நீங்கள் கூறும் போது நீங்கள் தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில், பாகிஸ்தான் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்பதை பாகிஸ்தான் அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்வார்கள்." என்று கூறினார்.

மேலும் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தானை உலகம் பார்க்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பால் மூளை மூடுபனி இருந்தபோதிலும், அச்சுறுத்தல் எங்கிருந்து வந்தது என்பதை சர்வதேச சமூகம் மறக்கவில்லை.

அவர்கள் சொல்வதைப் பொறுத்தவரை, உண்மை என்னவென்றால், இன்று உலகம், பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. எனவே, அவர்கள் செய்யும் கற்பனைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்கள் தங்களை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று என்று நான் கூறுவேன்" என்று அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Pakistan S Jaishankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment