Indian Railway Train Ticket service agent : ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் மாதம் ஒன்றிற்கு ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்க வேண்டுமா? ஆம் என்பவர்களுக்கு வழிகாட்டுகிறது ஐஆர்சிடிசி. கமிசன் அடிப்படையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்களுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்ள ஐஆர்சிடிசி முன்வந்துள்ளது.
ஐஆர்சிடிசி ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜென்ட்களை அந்தந்த ஊர்களிலேயே நியமிக்க உள்ளது. இவர்கள் அனைத்து வகை டிக்கெட்களையும் முன்பதிவு செய்வதற்கான அங்கீகாரத்தை ஐஆர்சிடிசி அவர்களுக்கு வழங்க உள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களை, அந்தத்த ரயில்வே ஜோனலின் கமர்சியல் டிபார்ட்மென்ட் நியமிக்கும்.
ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜென்ட் ஆக விரும்புவோர், ஐஆர்சிடிசியன் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும். ஏஜென்ட் ஆன பின்பு, டில்லியில் செல்லத்தக்க வகையில் ரூ.10 ஆயிரத்திற்கான டிமாண்ட் டிராப்டை, ஐஆர்சிடிசி பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஏஜென்ட்ஷிப்பை ரூ. 5 ஆயிரம் கொடுத்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த ஏஜென்ட்ஷிப்பில் இருந்து விலகுவதாக இருந்தால், ரூ.5 ஆயிரம் உங்களுக்கு திருப்பியளிக்கப்படும்.
ஐஆர்சிடிசி ஏஜென்ட் ஆகும் வழிமுறை
ரூ.100 மதிப்பிலான ஸ்டாம்ப் பேப்பரில், ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜென்ட் ஆக விருப்பம் என எழுதி, ரூ.20 ஆயிரத்திற்கான டிமாண்ட் டிராப்டை இணைக்கவேண்டும். அதனுடன் பெர்சனல் டிஜிட்டல் சர்டிபிகேட், சம்பந்தப்பட்ட ரயில்வே ஜோனல் அதிகாரியின் கடிதம், பான் கார்டு, வருமானவரி கணக்கு தாக்கல் சான்று, முகவரி சான்று உள்ளிட்டவைகள் இணைத்து அனுப்ப வேண்டும்.
ஏஜென்ட்களுக்கான கமிஷன் எவ்வளவு
ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜென்ட்களுக்கான கமிஷன் தொகையை, ஐஆர்சிடிசி நிர்ணயித்துள்ளது. அதன்படி, படுக்கை வசதி கொண்ட ரயில் டிக்கெட்டுக்கு ரூ. 30 வீதமும், ஏசி ரயில் டிக்கெட்களுக்கு அதிகபட்சம் ரூ.60 வரையிலும் கமிஷன் வழங்கப்படும் என்று ஐஆர்சிடிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.