/indian-express-tamil/media/media_files/2024/12/04/nlCWCNN6AuO5zaEwRLFI.jpg)
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று (டிச.4) காலை 5.3 ரிக்டர் அளவில் 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஐதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவின் ஐதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி கொத்தகுடேம் உள்ளிட்ட இடங்களிலும், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது இங்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
EARTHQUAKE STRIKES TELANGANA
— Atulkrishan (@iAtulKrishan1) December 4, 2024
A 5.3 magnitude earthquake hit Mulugu, Telangana, at 7:27 AM this morning, according to the National Center for Seismology.
No immediate reports of damage or casualties have surfaced. pic.twitter.com/zSnAjiNrMT
இன்று காலை 7.27 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.