/indian-express-tamil/media/media_files/ed1dBeI1OghU8E2g5SEL.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6:52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை 7:39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
தொடர்ந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங்-கில் காலை 08:46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது
இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காலை 9:00 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
Earthquake of Magnitude:3.9, Occurred on 08-12-2023, 09:00:31 IST, Lat: 23.45 & Long: 70.42, Depth: 20 Km ,Location: 133km NNW of Rajkot, Gujarat, India for more information Download the BhooKamp App https://t.co/47yNKVinb1@Dr_Mishra1966@KirenRijiju@ndmaindia@Indiametdeptpic.twitter.com/ijoFQMykvZ
— National Center for Seismology (@NCS_Earthquake) December 8, 2023
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.