மம்தா பானர்ஜிக்கு எதிராக கருத்து தெரிவித்த அபிஜித் கங்கோபாத்யாய் மீது திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Election Commission bars BJP’s Abhijit Gangopadhyay from campaigning for 24 hours over Mamata remarks
லோக்சபா தேர்தல் பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை அடுத்து, கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பா.ஜ.க வேட்பாளருமான அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.
இந்த தடை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் புதன்கிழமை மாலை 5 மணி வரை அமலில் இருக்கும். ஏனெனில், அவரது கருத்துகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
ஹால்டியாவில் மே 15-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பானர்ஜிக்கு எதிராக கங்கோபாத்யாய் பேசியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
பா.ஜ.க-வின் தாம்லுக் மக்களவைத் தொகுடி வேட்பாளரான கங்கோபாத்யாய், மம்தா பானர்ஜிக்கு எதிராக கண்ணியமற்ற வகையில் கருத்து தெரிவித்ததற்காக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளித்த ஒரு நாள் கழித்து தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு வந்தது. கங்கோபாத்யாயின் கருத்துக்கள் முறையற்றவை, நியாயமற்றவை மற்றும் கண்ணியமற்றவை என்றும், முதன்மையான பார்வையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது கங்கோபாத்யாய் தனது பொது வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறு ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது. “… தேர்தல் ஆணையம் ஸ்ரீ அபிஜித் கங்கோபாத்யாயாவின் மேற்கூறிய பதிலில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் குறைகளை கவனமாக ஆராய்ந்து, மீண்டும் அறிக்கையை ஆராய்ந்து, அவர் ஒரு கீழ்த்தரமான தனிப்பட்ட தாக்குதலைச் செய்து, தேர்தல் நடத்தை விதிகள் சட்டத்தின் விதிகளை மீறியதாக உறுதியாக நம்புகிறது.” என்று கங்கோபாத்யாய்க்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.
“ஆனால், தேர்தல் ஆணையம் சமரசமின்றி மேற்கூறிய அதே அறிவிப்பில் உறுதியாக உள்ளது. ஸ்ரீ அபிஜித் கங்கோபாத்யாயின் அறிக்கை இந்தியாவில் பெண்களின் நிலை பாதிப்பு மீது நேரடி அவமதிப்பைக் காண்கிறது; எந்த ஒரு பெண்ணின் மரியாதைக்காகவும் பயன்படுத்தப்படும் அத்தகைய பேச்சு முற்றிலும் கண்டிக்கத்தக்கது, அவர் குறிவைத்தது ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் பற்றி பேசக்கூடாது” என்று தேர்தல் ஆணையம் மேலும் கூறியது.
“இதுபோன்ற அருவருப்பான வார்த்தைகள் ஸ்ரீ அபிஜித் கங்கோபாத்யாயாவின் கல்வி மற்றும் தொழில் பின்னணியில் உள்ள ஒருவரிடமிருந்து வந்துள்ளன” என்பதில் வேதனையை வெளிப்படுத்தியது.
இந்த போக்குக்கு பதிலளித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது என்றார். “கங்கோபாத்யாயாவின் கருத்து மோசமானதாகவும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் உணர்ந்ததையடுத்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால், அவரது கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் தவறாகப் புரிந்துகொள்ள முயற்சித்துள்ளது. அவர் ஒரு கண்ணியமான நபர் மற்றும் மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்.” என்று கூறினார்.
மத அமைப்புகள் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்துகளை தேர்தல் குழு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பட்டாச்சார்யா வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.