மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் தேர்தல் : மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 230 சட்டமன்ற தொகுதிகளிலும், மிசோரம் மாநிலத்தில் 40 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் தேர்தல் களம் : பாஜக Vs காங்கிரஸ்
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பலத்தினை சோதிக்க மிகவும் சரியான களமாக அமைந்திருக்கிறது மத்தியப் பிரதேசம். பாஜக சார்பில் 230 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் 229 வேட்பாளர்களும் நிற்கின்றனர். அதே போல் பகுஜன் சமாஜ் கட்சியும் 227 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி சார்பில் 51 வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சையாக 1102 வேட்பாளர்கள் என களை கட்டியுள்ளது மத்திய பிரதேச தேர்தல் களம். மொத்தம் 2,907 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
5 கோடி வாக்களர்களைக் கொண்டுள்ள மத்தியப் பிரதேசத்தில் சுமார் 65 ஆயிரம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் மட்டும் நிர்வாகம் செய்யும் வகையில் 500 பிங்க் வாக்குப் பதிவு மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
மிசோசரம்
காலை ஏழு மணிக்கே தொடங்கியது மிசோரத்தில் வாக்கு பதிவு. காங்கிரஸ் கட்சி சார்பில் 40 வேட்பாளர்களும், பாஜக சார்பில் 39 தொகுதிகளிலும் வாக்களர்களை இறக்கியுள்ளது. மிசோரத்தில் 7.70 வாக்களர்கள் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 11ம் தேதி நடைபெறுகிறது.
மேலும் படிக்க : புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்