Advertisment

‘கர்நாடகா இறையாண்மை’: சோனியா கருத்துக்களை விளக்கி, ‘சரிசெய்ய’ காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

‘கர்நாடகத்தின் இறையாண்மை’: சோனியா மீது நடவடிக்கை எடுக்க கோரிய பா.ஜ.க; தெளிவுபடுத்தி, ‘சரிசெய்ய’ காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

author-image
WebDesk
New Update
sonia kharkge

சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே

“கர்நாடகத்தின் இறையாண்மையை” ஆதரிக்கும் வகையில் சோனியா காந்தி கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கள் குறித்து “தெளிவுபடுத்தி” “சரிசெய்யும் நடவடிக்கைகளை” எடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது.

Advertisment

ஒரு கட்சியாக காங்கிரஸின் பதிவை ரத்து செய்யக் கோரியும், சோனியாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து "முன்மாதிரியான தண்டனை நடவடிக்கை" தொடங்க வலியுறுத்தியும், பா.ஜ.க தேர்தல் ஆணையத்தை அணுகிய சில மணிநேரங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் கடிதம் வந்தது.

இதையும் படியுங்கள்: சோனியா காந்தி கருத்துக்கு எதிர்ப்பு; தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகார்

தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தாக்கல் செய்த புகார் மனு காங்கிரஸின் ட்வீட் அடிப்படையிலானது, அதில் மே 6 அன்று ஹுப்பள்ளியில் தனது உரையில், “கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது” என்று சோனியா கூறினார், என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோனியா “இறையாண்மை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்பதை அவரது முழு உரையின் டிரான்ஸ்கிரிப்ட் சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் அளித்ததுடன், காங்கிரஸ் கட்சியை "போலி மற்றும் பொய்யானது" என்றும், மாநிலத்தின் "சுவாபிமான் (சுயமரியாதை)" இழிவுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டியது.

​​சோனியாவின் பேச்சு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் கீழ் அரசியல் கட்சிகள் தங்களை பதிவு செய்துக் கொண்டபோது, எடுத்த உறுதிமொழியை மீறியதாக கூறும் பா.ஜ.க.,வின் புகாரை மேற்கோள் காட்டி, மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம், மேலும் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தும் கொள்கைகளுக்கு இணங்க, ஒரு கட்சி “இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருக்க வேண்டும் என சட்டத்தின் பிரிவு 29A (5) கூறுகிறது.

காங்கிரஸால் பகிரப்பட்ட சோனியா பேசியதாகக் கூறப்படும் "சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தவும் திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும்" மல்லிகார்ஜூன் கார்கேவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், அந்தக் கடிதம் வெறும் கடிதம் என்றும், “நோட்டீஸ் அல்ல” என்றும், காங்கிரஸிலிருந்து தெளிவுபடுத்துவதற்கான காலக்கெடுவைக் குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையில், கர்நாடகாவில் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.

முன்னதாக, தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க குழுவை வழிநடத்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், “இறையாண்மை” என்ற வார்த்தை வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டது என்றும் அது “துக்டே துக்டே (பிரிவினைவாத) கும்பலின் அஜெண்டா” என்றும் கூறினார்.

“இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் எங்களின் புகார்களை தீவிரமாக கேட்டறிந்தது,” என்று பூபேந்தர் யாதவ் கூறினார்.

பூபேந்தர் யாதவ், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் தருண் சுக், அனில் பலுனி மற்றும் ஓம் பதக் ஆகியோர் கையெழுத்திட்ட பா.ஜ.க புகாரில், "இந்தியாவை மோசமான வெளிச்சத்தில் காட்ட" காங்கிரஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வது துரதிர்ஷ்டவசமானது என்று கூறப்பட்டுள்ளது.

“இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த மற்றும் சுதந்திரத்திற்குப் பின் கலை, கலாச்சாரம், கல்வி, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் முன்னணியில் இருந்த கர்நாடக மக்களுக்கு பிரிவினையை பரிந்துரைப்பது, கர்நாடக மக்களை அவமானப்படுத்துவதும் இழிவுப்படுத்துவதும் ஆகும்,” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரும், பா.ஜ.க தேர்தல் மேலாண்மைக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஷோபா கரந்த்லாஜே, சோனியாவின் அறிக்கைகள் "அதிர்ச்சியூட்டியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று கூறினார்.

காங்கிரஸின் “ஷாஹி பரிவார்” கர்நாடகாவை இந்தியாவிலிருந்து பிரித்து செல்ல விரும்புகிறது என்று மைசூருவின் நஞ்சன்கூடில் நடந்த பேரணியில் காந்தி குடும்பத்தினர் மீது பிரதமர் நரேந்திர மோடி “இறையாண்மை” கருத்துகள் குறித்து தாக்குதலைத் தொடங்கிய ஒரு நாள் கழித்து, தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க புகார் அனுப்பியுள்ளது. "துக்டே-துக்டே (பிரிவினைவாத) கும்பல் நோய் இவ்வளவு உயரத்தை எட்டும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை," என்று மோடி கூறினார்.

பா.ஜ.க.,வின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள கர்நாடகா மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, பா.ஜ.க அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மோடி பதிலளிக்க வேண்டும் என்றும், “சாக்குபோக்குகள்” பா.ஜ.க.,வின் புகலிடமாக இருக்க முடியாது என்றும் கூறினார்.

“கர்நாடகாவில் ஒரு கதை வேண்டும் என்பதற்காக காரணத்தைப் பிடிக்க முயல்வதால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.,வின் விரக்தி வெளிப்படையானது. கர்நாடகாவின் ‘ஸ்வாபிமானை’ (சுயமரியாதை) பா.ஜ.க ஏன் இழிவுபடுத்துகிறது என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க மறுப்பதால், அவர் பரப்பும் போலி மற்றும் பொய்யை நாங்கள் நிராகரிக்கிறோம், ”என்று ரன்தீப் சுர்ஜேவாலா பி.டி.ஐ அறிக்கையின்படி கூறினார்.

மகாராஷ்டிராவின் பா.ஜ.க-சிவசேனா அரசு “கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்களுக்கு தனது திட்டங்களை விரிவுபடுத்தியது ஏன்” என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று ரன்தீப் சுர்ஜேவாலா கேட்டுக் கொண்டார். “இது கூட்டாட்சியின் அப்பட்டமான மீறல் இல்லையா? ஏன் கன்னட இளைஞர்கள் CRPF தேர்வை கன்னடத்தில் எழுத மோடி அரசால் அனுமதிக்கப்படவில்லை? குடியரசு தின அணிவகுப்பில் நாராயண குருவின் அலங்கார ஊர்தியை ஏன் மோடி அரசு அனுமதிக்கவில்லை? என்று ரன்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

தேர்தல் ஆணையத்திற்கு அளித்த மனுவில், சோனியாவின் பேச்சு குறித்த காங்கிரஸ் ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்டை பா.ஜ.க இணைத்து, “கர்நாடகம் இந்தியாவில் இருந்து தனியானது என்று காங்கிரஸ் நம்புகிறது... இது பிரிவினை உணர்வுகளைத் தூண்டுவதற்கும், சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் வழிவகுக்கும் அதிர்ச்சிகரமான அறிக்கை," என்று குற்றம் சாட்டியது.

சோனியாவின் பேச்சு குறித்து காங்கிரஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: 6.5 கோடி கன்னடர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறார்: 'கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும் அல்லது ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த காங்கிரஸ் யாரையும் அனுமதிக்காது'.

மே 6ஆம் தேதி ஹுப்பள்ளியில் சோனியா பேசியதாவது: “பா.ஜ.க அரசின் கொள்ளை, பொய், ஆணவம், வெறுப்பு போன்றவை ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது, அதிலிருந்து விடுபடாமல், கர்நாடகாவோ, தேசமோ வளர்ச்சியடைய முடியாத சூழல் உருவாகியுள்ளது.”

“மோடியின் ஆசீர்வாதத்தை” உறுதி செய்ய கர்நாடக மக்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதைக் குறிப்பிட்டு பேசிய சோனியா காந்தி றியதாவது: “தாங்கள் வெற்றிபெறவில்லை என்றால், மோடிஜியின் ஆசீர்வாதங்கள் கர்நாடகாவுக்குக் கிடைக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள்.. பா.ஜ.க தோற்றால் இங்கு கலவரம் ஏற்படும் என்று சொல்கிறார்கள்... ‘கர்நாடக மக்களை பலமற்றவர்கள், பலவீனமானவர்கள் என்று நினைக்காதீர்கள்’ என்று உங்கள் சார்பாக அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கர்நாடக மக்கள் யாருடைய ஆசீர்வாதத்திலும் நிலைத்திருக்கவில்லை, மாறாக அவர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியை நம்பியிருக்கிறார்கள். கர்நாடக மக்கள் கோழைகள் அல்லது பேராசைக்காரர்கள் அல்ல... அவர்கள் எதனால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை கர்நாடக மக்கள் மே 10ஆம் தேதி சொல்வார்கள்.”

செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்தர் யாதவ், பா.ஜ.க அரசாங்கத்தின் கீழ் செய்யப்பட்ட பல்வேறு பணிகளுக்கான கட்டணங்களின் பட்டியலுடன் கூடிய “ஊழல் விளக்கப்படம்” உட்பட அதன் விளம்பரங்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் இதுவரை தேர்தல் ஆணையத்திடம் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்று கூறினார். கோரிக்கைகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரசாரத்தின் போது அளித்த அறிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜேபி நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கோரியுள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி, முக்கிய பா.ஜ.க தலைவர்களுக்கு எதிரான காங்கிரஸின் புகார்களில் எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால், காங்கிரஸ் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டும் பா.ஜ.க கட்சியின் விளம்பரங்களுக்காக கர்நாடக பா.ஜ.க தலைவர் நளின் குமார் கட்டீலுக்கு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Karnataka Sonia Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment