rahul-gandhi | elections | rajasthan | பிரதமர் நரேந்திர மோடியை "பிக்பாக்கெட்" என்றும், "பனாதி” (கெட்ட சகுனம்) என்று கூறியதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (நவ.23) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பேரணியின் போது ராகுல் காந்தி பிரதமரைப் பற்றி கேலிக்குரிய மற்றும் அருவருப்பான முறையில் பேசினார் என்று பாஜக புகார் அளித்திருந்தது.
இந்தப் புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக ராகுல் காந்தி பதிலளிக்கும்படியும், சனிக்கிழமை (நவ.25,2023) மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் பரப்புரையின்போது, பிரதம மந்திரியை "பிக்பாக்கெட் (ஜெப் கத்ரா)" என்று காந்தி ஒப்பிட்டார். தொடர்ந்து, கடந்த வாரம் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மோடி பார்த்தது குறித்து பேசிய ராகுல் காந்தி, அந்தப் போட்டியில் இந்தியாவை மோடி தோற்கடித்து விட்டார்” என்றார்.
முன்னதாக, கடந்த 9 ஆண்டுகளில் பணக்காரர்களின் ரூ.14 லட்சம் கோடி கடன்களை பிரதமர் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து பாஜக, பிரதமர் எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனைத்து வங்கிகளும் செயல்படுவதாகவும் அது கூறியுள்ளது.
மேலும் ராகுல் காந்தி தீங்கிழைவிக்கும் வார்த்தைகளை பிரயோகப்படுத்தினார் எனவும் கூறியுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : EC serves notice to Rahul Gandhi over ‘panauti’, ‘pickpocket’ remarks on PM Modi
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“