இந்திய தேர்தல் ஆணையம் தெலுங்கானா அரசிடம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரும் வரை ரைத்து பந்து (Rythu Bandhu) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ராபி தவணை உதவித்தொகையை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று திங்கள்கிழமை தெரிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: EC tells Telangana govt to stop disbursal of Rythu Bandhu assistance during MCC
தெலுங்கானா அரசு சில வழிமுறைகளைப் பின்பற்றும் வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில் பணம் வழங்குவதற்கு ‘ஆட்சேபனை இல்லை’ என்று தேர்தல் ஆணையம் நவம்பர் 25 அன்று கூறியிருந்தது. 2018 சட்டமன்றத் தேர்தலின் போது, முதலில் அக்டோபர் 5, 2018 அன்று வெளியிடப்பட்ட உத்தரவுகளில், புதிய பயனாளிகளை சேர்க்கக் கூடாது, எந்த விளம்பரமும் செய்யக் கூடாது, உதவித் தொகை வழங்குவதில் எந்த அரசியல் பிரமுகர்களும் ஈடுபடக் கூடாது, என்று வழிமுறைகளை வெளியிட்டது.
தெலுங்கானா நிதியமைச்சர் டி. ஹரீஷ் ராவ், தேர்தல் தேதிக்கு முன்னதாக குறிப்பிட்ட நேரத்தில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டார், இது ஊடகங்கள் மூலம் பரவலாக பேசப்பட்டது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடமிருந்து தேர்தல் ஆணையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் வந்தது.
“பி.ஆர்.எஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரான கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகர் மற்றும் தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ்... தேர்தல் நடத்தை விதிகள் பிரிவு VII இல் விதிகளை மீறியது மட்டுமல்லாமல், திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட உதவித்தொகை குறித்து விளம்பரப்படுத்துவதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளையும் மீறினார் மற்றும் அதன் மூலம் நடந்துகொண்டிருக்கும் தேர்தல் செயல்பாட்டில் சமநிலையை சீர்குலைத்தார்" என்று இந்திய தேர்தல் ஆணையம் திங்களன்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியது.
மேற்கோள் காட்டப்பட்ட தேர்தல் நடத்தை விதியானது அதிகாரத்தில் உள்ள கட்சியின் வரைமுறைகளைக் குறிக்கிறது மற்றும் நிதி மானியங்கள் அல்லது வாக்குறுதிகள் எதுவும் அறிவிக்கப்படக்கூடாது என்று கூறுகிறது.
"மேலே குறிப்பிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் 'எந்த ஆட்சேபனையும் இல்லை' என்பதற்கான நிபந்தனைகள் தெளிவான மீறப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தில் விதிகள் அமலில் உள்ள நிலையிலும், Rythu Bandhu திட்டத்தின் கீழ் ராபி பருவ தவணையை வழங்குவதற்கு 25 நவம்பர், 2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் வழங்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அனுமதி உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றும் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக தளர்த்தப்படும் வரை திட்டத்தின் கீழ் எந்த பணமும் வழங்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் வியாழன் அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது மற்றும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.