Loksabha | Election Commission: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய அவை அமைக்கப்பட வேண்டும். இதனையடுத்து, வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் கால அட்டவணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும்.
கடந்த முறை மக்களவைத் தேர்தல் மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. தேர்தல் அறிவிப்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பது குறிபிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: EC to announce Lok Sabha polls schedule at 3 pm tomorrow
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“