Advertisment

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு... தலைவர்களின் கருத்து என்ன?

இந்திய அரசியல் சாசனத்தில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டினை அளிக்க இடம் இல்லை - ஓவைசி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parliamentary Sessions 2019

Parliament

Economically Weaker Sections Reservations : பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.  கடந்த டிசம்பர் 11ம் தேதி குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. கடைசி நாளான இன்று, இந்த திருத்த மசோதாவினை தாக்கல் செய்ய இருக்கிறது மத்திய அரசு.

Advertisment

Economically Weaker Sections Reservations

வெகுநாட்களாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 50% மேல் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வரம்பு ஒன்றினை கட்டமைத்திருக்கிறது.

நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு

தற்போது பட்டியில் இனத்தவருக்கு 15% இட ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 7.5 இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு 27% இடஒதுக்கீடு என மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு இந்தியா முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் தமிழகம் மட்டும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் 69 % இடஒதுகீட்டினை கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக பெற்றிருக்கிறது.

மராட்டியர்கள், படேல், மற்றும் ஜாட் போன்ற சமூகத்தினர் பொருளாதார ரீதியாக எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

Economically Weaker Sections Reservations - 10% இட ஒதுக்கீடு பெறுவதற்கான வரம்புகள்

பொதுப்பிரிவினரில் 10% இடம் ஒதுக்கீடு செய்யப்படு வேண்டுமெனில், அவர்கள் 8 லட்சத்துக்கும் குறைவான வருவாயை பெறுபவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் 5 ஏக்கர் வரையில் மட்டுமே நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.

1000 சதுர அடிக்கு குறைவான வீட்டில் வசிப்பவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.

10% பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு கடந்த வந்த பாதை

1990ல் மண்டல் கமிஷனின் பரிந்துரையின் பெயரில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கி வி.பி.சிங் அரசு உத்தரவிட்டது.

1991ம் ஆண்டு பிரதமராக பொறுப்பில் இருந்த நரசிம்மராவ் அரசின் கீழ் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து 1992ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதியப்பட்டு, அதன் தீர்ப்பில் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மெலும் பொதுப்பிரிவில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பை ரத்து செய்து அறிவித்தது.

2003ல் பாஜக ஆட்சியில், பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அமைச்சர்கள் குழுவை அமைத்தனர். 2004ம் ஆண்டு அவர்கள் அளித்த அறிக்கையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் போராட்டம் செய்ததால் மீண்டும் அந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வராமல் போனது.

Economically Weaker Sections Reservations - தொடரும் எதிர்ப்புகள் :

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி இப்படி ஒரு சட்டம் உருவாக்கப்படுமா என்று கேள்விகளை முன் வைக்கின்றார்கள் எதிர்க்கட்சியினர். வருமான வரியை கட்டும் அளவிற்கு வருமானம் உள்ளவர்களை எப்படி பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என வகைப்படுத்துவது ?

ஆதரவும் எதிர்ப்பும்

இந்த 10% இட ஒதுக்கீட்டினை பல கட்சிகள் எதிர்த்தும் உள்ளனர். பலர் ஆதரித்தும் உள்ளனர். உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி இந்த இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவினை தெரிவித்துள்ளார்.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக செயல்பட்டு வரும் ராம்தாஸ் அதவாலேவும் இந்த இடஒதுக்கீட்டு ஆதரவினை தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தன்னுடைய ஆதரவினை தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப் பேரவையில் தன்னுடைய எதிர்ப்பினை முன் வைத்துள்ளார் முக ஸ்டாலின். “சமூக நீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது மத்திய அரசின் இந்த முயற்சி” என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

டாக்டர் ராமதாஸ்

மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது என்பது ஆளும் பாஜகவின் மற்றும் ஒரு பொய். கூட்டத்தொடரின் இறுதி நாளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால், இதனை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றுவது கடினம். மத்திய அரசின் நிலைப்பாடு வெளிப்படையாகிவிட்டது.

மேலும் வி.பி. சிங் போன்றவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்ததிற்கு அவர்கள் இறுதி நேரத்தில் எடுத்த மிகப் பெரிய முடிவே காரணம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

தெலுங்கானா நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசியின் கருத்து

ஆண்டாண்டு காலமாக தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இட ஒதுக்கீடு. பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான நலத்திட்டங்களை வேறு வகையில் சென்று சேர்க்கலாம். இந்திய அரசியல் சாசனத்தில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டினை அளிக்க இடம் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் :

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment