சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் உதவியாளர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் உதவியாளர் சௌமயா சௌராசியா ( Saumaya Chaurasia) அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
முன்னதாக, சத்தீஸ்கரில் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு டன் நிலக்கரியிலிருந்தும் மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் அடங்கிய கார்டெல் மூலம் டன்னுக்கு 25 ரூபாய் சட்டவிரோதமாக வசூலிக்கப்படுகிறது" என்று கூறப்படும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
முன்னதாக இந்த வழக்கில் பல சோதனைகளுக்குப் பிறகு, அக்டோபரில் மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது பூபேஷ் பாகலின் உதவியாளர் சௌமயா சௌராசியா கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil