ED arrests Delhi CM Kejriwal | டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இல்லத்திற்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இன்று, கலால் கொள்கை வழக்கில் வலுக்கட்டாய நடவடிக்கையில் இருந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்தது.
இதற்கிடையில், வடக்கு டெல்லியின் சிவில் லைனில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டின் அருகே ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையில், “டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை நேசிக்கிறார்கள், அவர்கள் பாஜகவுக்கு பதிலளிப்பார்கள்” டெல்லி அமைச்சர் இம்ரான் ஹுசைன் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஆம் ஆத்மி கட்சி, உச்ச நீதிமன்றப் பதிவுத்துறைக்கு அவசரமாக விசாரணை நடத்தக் கோரி மின்னஞ்சல் எழுதியுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Arvind Kejriwal-ED Live Updates: ED arrests Delhi CM Kejriwal
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“