Advertisment

ராபர்ட் வாத்ராவின் உதவியாளர் கைது- முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத் துறை தகவல்

ராபர்ட் வாத்ரா எதிராக விசாரணை நடத்தி வரும் அமலாக்க இயக்குநரகம்,வழக்கு தொடர்பாக தற்போது தொழிலதிபர் சி.சி தம்பி என்பவரை கைது செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராபர்ட் வாத்ராவின் உதவியாளர் கைது- முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத் துறை தகவல்

ராபர்ட் வாத்ரா, மற்றும் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தி வரும் அமலாக்க இயக்குநரகம் (இடி) இந்த வழக்கு தொடர்பாக நேற்று என்.ஆர்.ஐ தொழிலதிபர் சி.சி தம்பி என்பவரை கைது செய்துள்ளது.

Advertisment

கைது செய்யப்பட்ட இந்த சி.சி தம்பி, ராபர்ட் வாத்ராவின் நெருங்கிய உதவியாளர் என்றும், லண்டனில் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய ராபர்ட்  வாத்ராவுக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வெளிநாட்டு வங்கி பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் தம்பியை கைது செய்துள்ளதாக கூறியுள்ளது. இந்த வங்கி பரிவர்த்தனை மூலம் வாத்ரா, பண்டாரி உடனான சொத்து ஒப்பந்தங்களுடன் இணைக்கும் போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

வாத்ராவின் வழக்கறிஞர் கே.டி.எஸ் துளசியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போது,"இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அமலாக்க இயக்குனரகம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று கூறினார்.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

தம்பி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் சதுக்கம் அமைந்துள்ள சொத்தின் உரிமை ஒப்பந்தங்களை, அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்திற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாத்ரா, பண்டாரி இந்த சொத்துக்களை வாங்கியதாக அமலாக்க இயக்குனரகம் ஆரம்பத்தில் இருந்து கூறிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

அமலாக்க இயக்குனரகத்தின் கூற்றுப்படி, இந்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி சாம்சங் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் 2007ம் ஆண்டில்  (ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில்) பெட்ரோலிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த சாம்சங் இன்ஜினியரிங் நிறுவனம், பண்டாரியின் சாண்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தை தனது ஆலோசனை நிறுவனமாக தேர்ந்தெடுத்தது. இதன் மூலம்  கிடைத்த 4.9 மில்லியன் டாலர் பணத்தை, லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள சொத்துக்களோடு  அமலாக்க இயக்குனரகம் இணைத்து பார்க்கின்றது.

2009 முதல் பண்டாரியின் வங்கி பரிவர்த்தனைகள் அமலாக்க இயக்குனரகம் ஆராய்ந்து வந்தது. ஜூன் 25, 2010 அன்று  பண்டாரி நிறுவனதத்திற்கு சொந்தமான பிரையன்ஸ்டன்  சொத்துக்கள் சி.சி தம்பிக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டதை அமலாக்க இயக்குனரகம் கண்டறிந்தது.

பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தின் முக்கிய குற்றச்சாட்டுகள் இவை:

* சாண்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரியாக பண்டாரி இருந்து வருகிறார். டிசம்பர் 10, 2009 அன்று 1.92 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள வெர்டெக்ஸ் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம் தான் பிரையன்ஸ்டன் சதுக்க சொத்தை வைத்திருந்தது. இந்த ஒட்டுமொத்த பணமும் 2009ம் ஆண்டு பெட்ரோலிய ஒப்பந்தத்தில் இருந்து பெற்ற நிதியென்று அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டுகிறது.

* இந்த சொத்தை வாங்கியதும், அனைத்து புனரமைப்பு மற்றும் மறுவடிவமைப்பு பணிகளும் 60,000 பவுண்டுகள் செலவில் வாத்ராவின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டன என்று அமலாக்க இயக்குனரகம் தெரிவித்து வருகிறது. அந்த இடத்தை வாத்ரா பார்வையிட்டதற்கு சாட்சி உள்ளது என்றும் அமலாக்க இயக்குனரகம் கூறியுள்ளது.

பண்டாரி வீட்டில் வருமான வரி சோதனை செய்த போது, பிரையன்ஸ்டன்  சொத்துக்கும் வாத்ராவுக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யும்  இ-மெயில் சிக்கியதாகவும் அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

* புதுப்பித்தல் முடிந்ததும், வெர்டெக்ஸ் ஹோல்டிங் நிறுவனத்திடம் இருந்து தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் தம்பிக்கு சொந்தமான ஸ்கைலைட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துக்கு மாறியுள்ளது.

ஜூன் 25, 2010 அன்று வெர்டெக்ஸ் ஹோல்டிங்ஸ் பெற்ற 1.9 மில்லியன் பவுண்டுகள், ஜூன் 30, 2010 அன்று சாண்டெக் இன்டர்நேஷனல் வங்கி கணக்கில் மீண்டும் செலுத்தப்பட்டுள்ளது.

பின்னர், சாய்ஸ் பாயிண்ட் ட்ரேடிங், ஜெயின் ட்ரேடிங் என்ற இரண்டு நிறுவனங்களுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.

* பின்னர், மார்ச் 30, 2013 அன்று, ஸ்கைலைட் இன்வெஸ்ட்மென்ட் பெயர் மேஃபேர் இன்வெஸ்ட்மென்ட்  என மாற்றப்பட்டது.  மேலும் சி.சி தம்பி தனது பங்குகள் அனைத்தையும் தனது உறவினர்களுக்கு மாற்றினார்.

பிரையன்ஸ்டன் சதுக்க சொத்து  ஸ்கைலைட் முதலீட்டு (தற்போதைய  மேஃபேர் முதலீட்டுக்கு) சொந்தமானது என்பது தான் அமலாக்க இயக்குனரகத்தின் மிகப்பெரிய வாதம்.

ஓ.என்.ஜி.சி மற்றும் ஓ.என்.ஜி.சி பெட்ரோ அடிஷன் லிமிடெட் (ஓபல்), தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொலைபேசி , குறுஞ்செய்தி  மற்றும் மின்னஞ்சல் போன்றவைகள் மூலம் பலமுறை தொடர்பு கொண்டாலும், இதுவரை அந்த நிறுவனங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

சாம்சங் இன்ஜினியரிங் செய்தித் தொடர்பாளர் ஜின் ஹார்ட்மேன், "சாம்சங் இன்ஜினியரிங் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கி வருகிறது"என்று கூறியிருந்தார்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment